கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பு எதிரொலி வீடுகளில் முடங்கிய எட்டு கிராம மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
04:45

திருப்புவனம்:திருப்புவனம் அருகே பழையனுார்-ஓடாத்துார் இடையே கிருதுமால் நதியில் பாலம் இல்லாததால் எட்டு கிராம மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.



பழையனுாரைச் சுற்றியுள்ள ஓடாத்துார், எழுவனுார், வல்லாரேந்தல், வாகைகுளம், சேந்தநதி உள்ளிட்ட எட்டு கிராம மக்கள் தங்களது தேவைகளுக்காக பழையனுார் வந்து செல்கின்றனர். பழையனுார்-ஓடாத்துார் இடையே கிருதுமால் நதி செல்கிறது. மழை காலங்களிலும், கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பின் போதும் எட்டு கிராமங்களுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. கிராமமக்கள் எந்த ஒரு வசதியும் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.



இப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பழையனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். கிருதுமால் நதியில் 12 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்,



தண்ணீர் செல்லும் போது மாணவர்கள் வெறும் துண்டை கட்டி கொண்டு ஆற்றை கடந்த பின் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர். மாணவிகள் வேறு வழியின்றி ஈர உடையுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். 19ம்தேதி வரை தண்ணீர் செல்லும். அதுவரை எட்டு கிராமமும் துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X