பாடத்திட்டத்தில் தற்காப்பு கலை:தெலுங்கானா கவர்னர் தமிழிசை எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2019
05:29

அவிநாசி;''தமிழக அரசின் பாட திட்டத்தில், தற்காப்பு கலையை ஒரு பாடமாக சேர்த்து, பெண்களுக்கு கற்பிக்க வேண்டும்'' என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.தெக்கலுார் அருகே, கே.பி.ஆர்., மில்ஸ் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில், பெண் தொழிலாளர் கல்வி பிரிவு வெள்ளி விழா நிகழ்ச்சி, நேற்று நடந்தது. நிர்வாக இயக்குனர் நடராஜன் வரவேற்றார்.


கே.பி.ஆர்., குழும தலைவர் ராமசாமி தலைமை வகித்து பேசுகையில், ''இதுவரை, 24 ஆயிரத்து 316 பெண் தொழிலாளர்கள் கல்வி பெற்றுள்ளனர்,'' என்றார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன், பேசியதாவது;வாழ்வின் ஒவ்வொரு நாளையும், மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும். பெண் கல்வியோடு உடல் நலன் காக்கும் யோகாவையும் கற்றுக்கொள்ள வேண்டும்; அத்துடன், தற்காப்பு கலையையும் கற்றுக் கொள்ள வேண்டும்.மாநில அரசு, பாடத்திட்டத்தில் தற்காப்பு கலையை ஒரு பாடமாக சேர்த்து, பள்ளி பருவத்தில் இருந்தே, கற்றுத்தர வேண்டும்.


பெண்கள் நினைத்தால், எதையும் சாதிக்க முடியும். தடைகற்களை படிக்கல்லாக மாற்றிக் கொள்ள வேண்டும்.நானும் மிக சாதாரண பெண் தான்; ஆனால், கொடுத்த வேலையை மிகச்சிறப்பாக செய்து முடிப்பதில் அசாதாரணப் பெண் என்பதால் தான், உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது.இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, நிறுவன வளாகத்தில் மரக்கன்று நட்டார். நிறுவனத்தில் பணிபுரியும் பல மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், தங்களின் கலாசார உடையணிந்து அவரை வரவேற்றனர்.பா.ஜ., மாநில துணை தலைவர் ராஜா, மேட்டுப்பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ., சின்ராஜ் ஆகியோர் பேசினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X