'பொங்கல் முடிஞ்சுதான் பசங்க வேலைக்கு போவாங்க போல...' உள்ளாட்சி தேர்தல் 'காமெடி'கள்.. கிராமங்களில் 'கலகல'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2019
05:33

அமைதி தவழும் கிராமங்கள், உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, தற்போது பரபரப்படைந்துள்ளன. கிராமங்களில், அரங்கேறிவரும், சில காட்சிகள், இங்கே:காட்சி 1:பல்லடம் அருகேயுள்ள ஒரு கிராமம்.



முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருக்கின்றனர். 'நாட்டாமை' பாணியில், அவர்களில் ஒருவர், தொண்டையைக் கனைத்தவாறு கேட்கிறார்: ''அப்போ, முடிவா... எத்தனை பேருதான் ஊராட்சி தலைவருக்கு போட்டி போடறீங்க''மூன்று பேர் கையை உயர்த்துகிறார்கள்.'போட்டியே இல்லாம, இருந்தா நல்லா இருக்கும்ல...' என்று மற்றொருவர் வினவ, ''நா வேணா விலகிக்கிறேன்...' என்று, மூவரில் ஒருவர் விலகி கொள்கிறார்.


போட்டியிடுவதற்கு தயாராக உள்ள ஒருவர், ''சொசைட்டி பதவில இருக்கறேன். இல்லைனு சொல்லல. அதுக்காக, ஊராட்சி தலைவர் பதவிக்கு நிக்கக்கூடாதுனு சொன்னீங்கன்னா எப்படி? சொசைட்டி பதவில நா ஒண்ணும் சம்பாதிக்கலே... இனிமே தான் சம்பாதிக்கணும்...' என்று கூற, அதிர்ச்சியடைகிறார்கள் முக்கிய பிரமுகர்கள்.'இதென்ன... இப்படி வெளிப்படையா சொல்றீங்க...' என்று அவர்கள் கேட்க, ''ஆமா... அதுல என்ன தப்பு. உண்மையத் தான சொல்றேன்'' என்று அவர் மறுதலிக்கிறார்.


இவருக்கு எதிராகப் போட்டியிடும் நபர், ''இப்பவே சம்பாதிக்கற நோக்கத்தோட இருக்காரு.... நான் களத்துல இறங்கப்போவது உறுதி'' என்கிறார்.கூட்டம் கலைகிறது. கூட்டத்தில் இருந்த ஒருவர் சொல்கிறார்: ''போட்டி இல்லாட்டி, நல்லா இருக்காது. போட்டி இருக்குனு தெரிஞ்சவுடனேதான், மனசு குளுகுளுன்னு இருக்குது...' இது எப்படி இருக்கு!காட்சி 2:பொங்கலூர் அருகேயுள்ள ஒரு ஊராட்சி.''இன்னிக்கு, வேலைக்குப் போகலையா...' என்று இளைஞரைப் பார்த்து, கேட்கிறார் ஒரு முதியவர்.


''ஏன் பெரிசு... நான் வேலைக்குப் போகலேன்னு எப்படி சொல்றே... ஊராட்சித் தலைவர் தேர்தல் முடியறவரைக்கும் சாப்பாட்டுக்குப் பஞ்சம் இல்லே...'' என்று கவுண்டமணி பாணியில் பதில் சொல்கிறார் இளைஞர்.''அந்த வேட்பாளரு, எனக்கு தூரத்து சொந்தம்தான். சாப்பாட்டோடு, தினம் 300 ரூபா கைக்கு வந்திரும். நைட்ல கட்டிங்கும் உண்டாம்'' என்று அடுக்கிக்கொண்டே போகும் இளைஞர் முகத்தில் சந்தோஷம்.'ஒண்ணையும் பெரிய மனுசன்னு நம்பறான் பாரு, அவனை (ஊராட்சி தலைவர் வேட்பாளர்)சொல்லணும்'' என்று, பெரியவர் இளைஞரைக் கடுப்படிக்கிறார்.''சொந்தக்காரங்க, பங்காளிக மட்டுமில்ல... எத்தனையோ பேரு, வேட்பாளரு பின்னாடிதான் சுத்திட்டு அலையுறாங்க... தேர்தல் முடிஞ்சதும் மட்டுமல்ல... இனி பொங்கல் முடிஞ்சுதான் வேலைக்குப் போறதுங்கற முடிவுலதான் பல பசங்க இருக்காங்க...'' என்று இளைஞர் கூற, முதியவருக்கு 'பி.பி.,' எகிறுகிறது.காட்சி 3:'நம்மூரை, பெண்ணுக்கு ஒதுக்கீட்டாங்க... சமுதாயத்துக்குப் பாடுபடுற ஒரு பெண்ணை, வேட்பாளரா நிறுத்த, மக்களே கூடி முடிவெடுக்கலாம்ல''ஆமாங்க.. அப்படித்தான் ஒரு பெண்ணை, ஒரு ஊர்ல, நிறுத்தினாங்க... பொது வேட்பாளருனு பரப்புனாங்க...''அடடே... பரவால்லையே...''கடைசீல பாத்தா, அடுத்த நாளே, நல்ல படிச்ச பொண்ணா இன்னொரு வேட்பாளரை போட்டிக்கு நிறுத்திட்டாங்க...''ஊருக்கு நன்மை நடக்குதோ இல்லையோ... ஊருக்குல்ல எத்தனை கோஷ்டி இருக்குனு தெரிஞ்சுக்கறதுக்கு, உள்ளாட்சித் தேர்தல் ரொம்பவே உதவிகரமா இருக்குல்ல...''உண்மைதான்.


சரி நம்மூர்ல யாரை நிறுத்தப்போறாங்க''அது இப்ப சொல்ல முடியாது. ஓட்டுச்சாவடில போயி, ஓட்டுச்சீட்ட பார்க்கும்போதுதான் தெரியும்''ஆமாங்க... நீங்க சொல்றதும் சரிதான்'திருப்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில், இருவர் இடையே நடந்த கலந்துரையாடல் இது.காட்சி 4:மகன்: 27ம் தேதி, ஸ்கூலுக்கு, லீவு விடுவாங்கல்ல...தந்தை: அன்னிக்கு என்னடா கெளம...மகன்: வெள்ளிக்கிழமைதந்தை; அப்ப... லீவு இல்லடா!மகன்: அன்னிக்கு உள்ளாட்சி தேர்தல்... எங்க ஸ்கூலுக்குத் தானே, நீங்க ஓட்டுப்போட போவீங்க....தந்தை: ஆமாடா... அன்னீக்கு லீவுதாம்பா... அப்பா, ஏதோ ஞாபகத்துல சொல்லீட்டேன்.மகன்: எங்களோட பொது அறிவு ரேஞ்சே தனி!தந்தை: நம்பிட்டேன்!மகன்: சரிப்பா... 30ம் தேதியும், லீவு விடலாம்ல...தந்தை: பக்கத்து ஒன்றியத்துலதாண்டா அன்னிக்கு தேர்தல்மகன்: லீவு விடறதுல, இவ்ளோ கஞ்சத்தனம் கூடாதுப்பா!

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X