உள்ளாட்சி பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்ய நல்ல நேரத்துக்கு போட்டி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2019
23:49

உடுமலை:உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல், இறுதி நாளன்று, வாகன ஊர்வலம் நடத்தி, நல்ல நேரத்தில் மனுத்தாக்கல் செய்ய, வேட்பாளர்கள் குவிந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது; விதிமுறை மீறல்களை கட்டுப்படுத்த முடியாமல் அலுவலர்கள் திணறினர்.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சித்தலைவர்கள், 201 ஊராட்சி வார்டுகள், 13 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. வேட்பு மனுத்தாக்கல், கடந்த 9ம் தேதி துவங்கியது.


நேற்று மனுத்தாக்கலுக்கு இறுதிநாளாகும். எனவே, ஊராட்சித்தலைவர், ஒன்றியக்குழு மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடுபவர்கள் ஒரே நேரத்தில், குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில், திரண்டனர். கிராமங்களில் இருந்து சரக்கு வாகனங்களில், தங்கள் ஆதரவாளர்களை, அனைத்து வேட்பாளர்களும், அழைத்து வந்தனர்.நேற்று நுாற்றுக்கணக்கான வாகனங்கள் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரில் இருந்த, அரசுப்பள்ளி மைதானத்தில் நிறுத்தப்பட்டன.குறிப்பாக, காலை, 12:00 மணிக்கு மேல் நல்ல நேரம் என்பதால், அ.தி.மு.க., உட்பட அனைத்து வேட்பாளர்களும், அந்நேரத்தில், மனுத்தாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.அ.தி.மு.க., வினர், பெதப்பம்பட்டி நால்ரோட்டில் இருந்து, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஒன்றிய அலுவலகத்துக்கு, ஊர்வலமாக வந்தனர். இதனால், பொள்ளாச்சி-தாராபுரம் ரோட்டில், போக்குவரத்து பாதித்தது.பெதப்பம்பட்டி நால்ரோட்டிலும், தாறுமாறாக கடந்த வாகனங்களால், குழப்பம் ஏற்பட்டது. சரக்குகளை ஏற்றும் ஆட்டோக்களில், விதிமுறைகளை மீறி, ஆட்களை அழைத்து வந்தும், குடிமங்கலம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதே போல், வேட்பாளர்களுடன் வந்தவர்களுக்கு, உணவு பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வினியோகிக்கப்பட்டன.


இத்தகைய விதிமீறல்களை தடுக்க, தேர்தல் கண்காணிப்புக்குழு இல்லாததால், தாராளமாக விதிகளை மீறினர். கிராமங்களிலும், மதுபாட்டில் வினியோகம் தாராளமாக துவங்கியுள்ளது.அலுவலகத்தில் 'உஷார்!'குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில், நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நுழைவாயிலில், வேட்பாளருடன், 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால், எவ்வித நெரிசலும் இல்லாமல், மனுத்தாக்கல் செய்தனர்; அலுவலர்களும் நிம்மதியடைந்தனர். வளாகமும் கூட்டம் இல்லாமல், காணப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X