புத்தாண்டு ஸ்பெஷல்! குப்பையிலும் வருவாய் ... அசத்தும் சென்னை மாநகராட்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 ஜன
2020
03:07
பதிவு செய்த நாள்
டிச 31,2019 23:10

குப்பை... இது வீசி எறியப்படும் கழிவு அல்ல; செல்வம் கொழிக்கும் மூலதனம் என, உணர்த்தி வருகிறது, சென்னை மாநகராட்சி. அது எப்படி என்பதை பார்ப்போம்.சென்னை மாநகராட்சி, 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும், ஒரு கோடி பேரில், 39 லட்சம் பேர் வாக்காளர்கள்.வசிப்போரில், வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் அதிகம்.இவ்வளவு பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள சென்னையில், தினமும், குறைந்தபட்சம், 5,220 டன் திடக்கழிவை, சென்னை மாநகராட்சி கையாள்கிறது. இந்த குப்பையை சேகரிக்க, கொடுங்கையூரில், 269 ஏக்கர் பரப்பளவிலும், பெருங்குடியில், 200 ஏக்கர் பரப்பளவிலும் குப்பைக் கிடங்குகள் உள்ளன. இங்கெல்லாம், 35 ஆண்டுகளுக்கு மேலாக, குப்பை கொட்டப்பட்டு வருகிறது.தரம் பிரிப்புமாநகரை துாய்மைப்படுத்தி, குப்பை கிடங்கிற்குள் சேரும் குப்பையால், சுற்றுவட்டாரத்தில், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.காற்று மாசடைந்து, அப்பகுதி மக்கள், சுவாச பிரச்னை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த மோசமான சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குப்பைக் கிடங்கு பகுதி மக்கள், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், குப்பை கிடங்குகளில், குப்பை கொட்டுவதை தவிர்க்க, பல்வேறு திட்டங்களை, மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த திட்டமிட்டு, தோல்வியடைந்துள்ளது.சென்னையில் உள்ள வீடுகளில், பாதி வீடுகளில் தான், குப்பையை தரம் பிரித்து வழங்குகின்றனர். திடக்கழிவு மேலாண்மை விதிப்படி, குப்பையை தரம் பிரித்து வழங்குவது கட்டாயம் என்பதால், 100 சதவீதம், வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து பெற, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை, கிடங்கிற்கு செல்லாமல் தடுக்கப்பட்ட பின், ஏற்கெனவே குப்பை கொட்டப்பட்டுள்ள நிலத்தை மீட்டு, மறுபயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற உள்ளன.அதன்படி, குப்பை கிடங்குகளின் மொத்த பரப்பளவு, இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியில், குப்பை மலைபோல் குவிக்கப்படும். குப்பையில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீர், குழாய்கள் வாயிலாக பாதுகாப்பாக வெளியே எடுக்கப்படும். அதன்பின், குப்பை தரம் பிரித்து எடுக்கப்படும். எதற்கும் உதவாத குப்பையை, 15 அடி ஆழத்தில் கொட்டி, செம்மண் கொட்டப்பட்டு, சதுர வடிவிலான பிரமிடுகள் போன்ற தோற்றத்தில், பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல; தற்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் யாருமில்லாத நிலையில், அதிகாரிகள் குப்பை கையாள்வதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.மாநகராட்சி, கடந்த மூன்றாண்டுகளாக, குப்பை கையாளும் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மாநகராட்சியில் சேகரமாகும், 5,220 டன் குப்பையில், 2,610 டன் மக்கும் குப்பை, தரம் பிரித்து எடுக்கப்படுகிறது.இதில், உயிரி எரிவாயு தயாரிக்கும் கலன்கள், 141, உயிரி மீத்தேன் தயாரிக்கும் நிலையம், 6, மூங்கில் தொட்டிகள், 585, மண் புழு தொட்டிகள், 23, ஐந்து காற்றுப்புகும் முறையிலான உரம் தயாரிக்கும் கிடங்குகள் என, 1,083 டன் குப்பை, கிடங்கிற்கு செல்லாமல், மறுசுழற்சி செய்யப்படுகிறது. விரைவில், 2,000 டன் குப்பை வரை, மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதேபோல், மக்காத குப்பையில், 100 டன் கொள்ளளவு கொண்ட, உயிரி இயற்கை எரிவாயு கூடத்தை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், மரக்கழிவுகள், தேங்காய் ஓடுகளை மறுசுழற்சி செய்ய, 400 தனியார் நிறுவனங்களிடம் அனுப்பும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. மறுசுழற்சி செய்ய முடியாத, 110 பொருட்களை, தினசரி, 300 டன், எரியூட்டும் நிலையத்தில் சாம்பலாக்கப்பட்டு, ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. சிமென்ட் ஆலைகளின் எரி பொருளுக்காகவும் அளிக்கப்படுகிறது.அதேபோல், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில், அதிகளவில் சேகரமாகும் குப்பையை தரம் பிரிப்பது, மறுசுழற்சிக்கான பொருட்களை தேர்ந்தெடுத்து பிரிப்பது உள்ளிட்ட பணிகளில், இளைஞர்கள் ஈடுபடலாம். இதனால், இரும்பு, தெர்மாகோல், பிளாஸ்டிக் உள்ளிட்ட மறுசுழற்சி பொருட்களை விற்போர், மாநகராட்சியின், www.madraswasteexchange.com என்ற இணையதளத்தில், விபரங்களை பதிவேற்றலாம். இணையதளம்அதேபோல், அவற்றை வாங்குவோரும், இந்த இணையதளத்தில் பதிவேற்றலாம்.அதேபோல், உரம் உள்ளிட்டவற்றை வாங்கவும், விற்கவும், இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம். ஆக, குப்பையை விற்பனைப் பொருளாக மாற்றும் தொழில் முனைவோர், இவ்வாறு பணம் சம்பாதிக்கலாம். அதேபோல், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகமாக சேரும் குப்பையில், மறு பயன்பாட்டு பொருட்களை தரம் பிரித்தும், பணம் சம்பாதிக்க முடியும். பல இளைஞர்களுக்கு, இதனால் வேலை வாய்ப்பும் கிடைக்கும் என, மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.இதுபோன்ற பல்வேறு பணிகளால், அடுத்த மூன்றாண்டுகளில், மாநகராட்சியில் சேரும் குப்பை, அந்தந்த மண்டலங்களிலேயே தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்படும் என, மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X