சென்னையில் குறைந்தது குற்றம்:போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்
Added : ஜன 02, 2020 | கருத்துகள் (6) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை:''போலீசாரின் அதிரடி நடவடிக்கை மற்றும் 'சிசிடிவி கேமரா' பொருத்தியதன் வாயிலாக, சென்னையில், 50 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளன,'' என, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:சென்னையில், 2.5 லட்சம், 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் பயனாக, 50 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளன. 2017ல், 615 ஆக இருந்த செயின் பறிப்பு சம்பவங்கள், 2019ல், 307ஆக குறைந்துள்ளது. ஆதாயக் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களும், மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பாதி அளவு குறைந்துள்ளது.

சாலை விபத்து தொடர்பாக, 2018ல், 7,794 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது, 2019ல், 935 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. விபத்துகளில், 2018ல், 1,297 பேர் பலியாகிய நிலையில், 2019ல், உயிரிழப்புகள், 1,252 ஆக குறைந்துள்ளது. காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, 7,620ல் இருந்து, 6,688 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, 35 மகளிர் காவல் நிலையங்களிலும், தனிப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள், அதில் இருந்து மீள்வதற்கு, 'தோழி' என்ற திட்டம் துவக்கப்பட்டுஉள்ளது. அத்துடன், காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலி குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, 15 நாட்களுக்குள், 10 லட்சம் பேர், இந்த செயலியை பதிவிறக்கம் செய்துஉள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, 25, 'போக்சோ' வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதில், நான்கு வழக்குகளில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 21 வழக்குகளில், குற்றவாளிகளுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, வரதட்சணை மரணம் குறித்து, ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. கற்பழிப்பு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் முற்றிலும் குறைந்துள்ளன.நாட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரமாக, சென்னை திகழ்வதாக, தேசிய குற்ற ஆவண காப்பகமும் சான்று அளித்துள்ளது.

சிசிடிவி கேமரா பொருத்தியது, வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க, பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தை அமல்படுத்தியதற்காக, மத்திய அரசு, இரு விருதுகளை அளித்து உள்ளது. தமிழக அரசும், ஆளுமைக்கான விருது அளித்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாயிலாக, போலி கால் சென்டர் நடத்தி மோசடி, மொபைலில் பேசி, கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த கும்பல்கள் கைது செய்யப்பட்டுள்ளன. நில அபகரிப்பு தொடர்பாக, 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து, 67 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், இரண்டு லட்சத்து, 35 ஆயிரம் பேருக்கு, 'பாஸ்போர்ட்' கிடைக்க, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தார், 10 ஆயிரத்து, 968 பேருக்கு, பாஸ்போர்ட் பெற்றுத் தரப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்புக்கு பாதுகாப்பு அளித்து, உலகத்தின் பாராட்டை பெற்றுள்ளோம். இவ்வாறு கமிஷனர் கூறினார்.கோலம் போட்ட பெண்ணுக்குபயங்கரவாத அமைப்புடன் தொடர்பு?
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:நிர்பயா திட்டத்தின் கீழ், 113 கோடி ரூபாயில், 2,000 சிசிடிவி கேமராக்களை, விரைவில் பொருத்த உள்ளோம். சில தினங்களுக்கு முன், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, பெசன்ட் நகரில், 92 வயது முதியவர் வீட்டு முன், கோலம் போட்டு தகராறு செய்தது தொடர்பாக, காயத்ரி கந்ததை என்ற பெண் உட்பட, சிலர் கைது செய்யப் பட்டனர்.

காயத்ரி கந்ததை, பாக்.,கில் உள்ள ஒரு அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக, அவரது, முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் குறித்த பின்னணி தகவல்கள், சந்தேகப்படும்படி உள்ளது. அவருக்கு, தமிழகத்தில் உள்ள சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காயத்ரி கந்ததைக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, தீவிரமாக விசாரித்து வருகிறோம்.இவ்வாறு கமிஷனர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
03-ஜன-202000:21:09 IST Report Abuse
Amal Anandan வழக்கை பதிவு செய்வதை குறைத்து இப்படி வழக்குகள் குறைந்துள்ளது என்று சொல்வது மக்களுக்கு செய்யும் துரோகம் , இந்த அடிமை கட்சி ஆட்சியில் எப்பவுமே இப்படித்தான்.
Rate this:
Cancel
Ramarajan - chennai,இந்தியா
02-ஜன-202016:52:06 IST Report Abuse
Ramarajan Good job.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-ஜன-202009:13:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கோலம் போட்ட பெண்ணுக்குபயங்கரவாத அமைப்புடன் தொடர்பு? ஹா.. ஹா.. வாழ்க மிரட்டல் ஜனநாயகம் .. நம்மூரு போலீசுக்கு இதான் தெரியும். அரசின் கொள்கைக்கு எதிராக ஜனநாயக உரிமையில் தட்டி கேட்டால் "தீவிரவாதி" என்று சொல்லி மிரட்டும் கேவலம். பெண்ணின் தந்தைக்கு தொடர்புள்ளதா என்று மிரட்டல். கோலம் போட்டதற்கு தீவிரவாதி என்று ஓலம் போடுகிறார்கள் போலீசார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X