குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி முன்வருமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

10 ஜன
2020
15:04
பதிவு செய்த நாள்
ஜன 10,2020 03:09

மதுரை:மதுரை வைகை ஆற்றில் குப்பையை கொட்டி புனிதத்தை கெடுப்போருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். குப்பையால் வைகை சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு வைகை ஆற்றில் நீண்ட நாட்களுக்கு தண்ணீர் ஓடியது. வெறுமையாய் கிடந்த போது கழிவுநீரை பாய்ச்சியும், குப்பையை வீசியும் வைகையை பாழ்ப்படுத்தினர். நீர் திறக்கப்பட்ட பிறகும் கூட சிலர் வைகையின் புனிதத்தை கெடுப்பதாக குப்பையை கொட்டுக்கின்றனர்.



தற்போது குறைவாக வரும் நீரை சமீபத்தில் கட்டிய தடுப்பணைகள் மூலம் தேக்கி வைத்துள்ளனர். மூன்று கி.மீ., துாரம் வரை நீர் தேங்கியுள்ளது. இதனால் ஆற்றின் இரு கரையோரங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் காய்ந்து போன பூ மாலை, பியூஸ் போன டியூப் லைட், பல்ப், பீங்கான், வீட்டிலுள்ள பழைய பொருட்கள் உட்பட ஒட்டுமொத்த கழிவுகளையும் தேங்கியுள்ள நீரில் சிலர் வீசி எறிகின்றனர்.



வீட்டில் அன்றாடம் சேரும் குப்பையை பாலிதீன் பையில் அடைத்து சிலர் பாலங்களில் நின்று வீசிச் செல்கின்றனர். இக்குப்பை பொட்டலங்கள் வைகை நீரில் மிதந்து கொண்டுள்ளன. இதனால் சுகாதாரசீர்கேடு நிலவுகிறது.நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மாநகராட்சி, வைகையின் புனிதம் காக்க அறிவிப்பிற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். வைகையில் குப்பை கொட்டுவோருக்கு மாநகராட்சி அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
10-ஜன-202021:10:12 IST Report Abuse
Charles ஆற்றில் குப்பை கொட்டுவது நம்முடைய உணவில் நாமே விஷம் வைத்துக்கொள்வதுபோல் ஆகும்,இதற்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.. வெறும் பைன் மட்டும் போறாது
Rate this:
Share this comment
Cancel
kumaresan k - madurai,இந்தியா
10-ஜன-202009:56:10 IST Report Abuse
kumaresan k இங்குமட்டுமல்ல மதுரைல முக்கியமான சுற்றுலா தலமான திருமலைநாயக்கர் மஹாலை சுற்றி உள்ள பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டும் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மதுரை மாநகராட்சி மாற்றி இருக்கிறது . சுற்றுலா தளங்களை சுற்றிஇம் , மதுரை சிட்டியில் போக்குவரத்து அதிகம் உள்ள மஹால் ,பந்தடி முதல் தெரு , மஞ்சனக்கார தெரு, கிழக்கு வெளி வீதி, ஆகிய மதுரை மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அதிகமான லாரி புக்கிங் ஆபீசுகளுக்கு மதுரை மாநகராட்சி அனுமதி அளித்து இருக்கிறது . இதனால் ஏற்படும் அதிகமான சுற்றுப்புற சீர்கேட்டையோ , தினம் தினம் மக்கள் அடையும் சொல்லொண்ணா போக்குவரத்து இடைஜெல்களை பற்றியோ , இதனால் மதுரை நகர்ப்புறம் லாரி ஓட்டுனர்கள் மற்றும் சம்பந்த பட்ட பொது மக்களின் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறி இருக்கும் அவலத்தை பற்றியோ சிந்தனை செய்யாத மதுரை மாநகராட்சி இனிமேலும் முழித்துக்கொள்ளுமா ? மற்ற மாநிலங்களில் செய்ததை போல லாரி ஆபீசுகளை ரிங் ரோடு அல்லது அதற்கு பக்கத்தில் உள்ள ஒரு ஏரியாவில் எல்லா லாரி ஆபீசுகளையும் லாரி போக்குவரத்துகளையும் கொண்டு செல்ல வேண்டும் . மதுரை நகரில் லாரி ஆபீசுகளுக்கு இடம் அனுமதி மறுக்க பட வேண்டும் . சிறு வாகனங்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும். திருமலை மகாலை சுற்றி உள்ள குப்பை கிடங்கை அங்கிருந்து அகற்றி மஹாலிபட்டி ரயில்வே கிராஸிங் தாண்டி கொண்டு செல்ல வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X