| குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி முன்வருமா Dinamalar
குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி முன்வருமா
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

10 ஜன
2020
15:04
பதிவு செய்த நாள்
ஜன 10,2020 03:09

மதுரை:மதுரை வைகை ஆற்றில் குப்பையை கொட்டி புனிதத்தை கெடுப்போருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். குப்பையால் வைகை சுகாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு வைகை ஆற்றில் நீண்ட நாட்களுக்கு தண்ணீர் ஓடியது. வெறுமையாய் கிடந்த போது கழிவுநீரை பாய்ச்சியும், குப்பையை வீசியும் வைகையை பாழ்ப்படுத்தினர். நீர் திறக்கப்பட்ட பிறகும் கூட சிலர் வைகையின் புனிதத்தை கெடுப்பதாக குப்பையை கொட்டுக்கின்றனர்.



தற்போது குறைவாக வரும் நீரை சமீபத்தில் கட்டிய தடுப்பணைகள் மூலம் தேக்கி வைத்துள்ளனர். மூன்று கி.மீ., துாரம் வரை நீர் தேங்கியுள்ளது. இதனால் ஆற்றின் இரு கரையோரங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் காய்ந்து போன பூ மாலை, பியூஸ் போன டியூப் லைட், பல்ப், பீங்கான், வீட்டிலுள்ள பழைய பொருட்கள் உட்பட ஒட்டுமொத்த கழிவுகளையும் தேங்கியுள்ள நீரில் சிலர் வீசி எறிகின்றனர்.



வீட்டில் அன்றாடம் சேரும் குப்பையை பாலிதீன் பையில் அடைத்து சிலர் பாலங்களில் நின்று வீசிச் செல்கின்றனர். இக்குப்பை பொட்டலங்கள் வைகை நீரில் மிதந்து கொண்டுள்ளன. இதனால் சுகாதாரசீர்கேடு நிலவுகிறது.நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மாநகராட்சி, வைகையின் புனிதம் காக்க அறிவிப்பிற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும். வைகையில் குப்பை கொட்டுவோருக்கு மாநகராட்சி அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X