மக்களுடன் இணைந்து கண்மாய் தூய்மைப்பணி: களமிறங்கியது பொதுப்பணித்துறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
06:33

மதுரை : மக்களுடன் இணைந்து மதுரை வண்டியூர் கண்மாயை பொதுப்பணித்துறை துாய்மைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அகற்றப்படும் ஆகாய தாமரையை மக்கச் செய்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.



இக்கண்மாய் 687.08 ஏக்கரில் உள்ளது. சாத்தையாறு அணை, மங்களக்குடி, உத்தங்குடி கண்மாய்களின் உபரி நீர் மற்றும் பெரியாறு வைகை பிரதான கால்வாய் மூலம் கண்மாய்க்கு நீர் வரத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கண்மாய் நீரை பயன்படுத்தி 750 ஏக்கர் பாசன வசதி பெற்றது. தற்போது குடியிருப்புகள் பெருகியதால் பாசன பரப்பு 150 ஏக்கராகி விட்டது.



இக்கண்மாய் 10 மாநகராட்சி வார்டுகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்க பொதுப்பணித்துறை முயற்சி எடுத்துள்ளது.கழிவு நீர் தேக்கம்தொழிற்பேட்டை, பூ மற்றும் காய்கறி மார்க்கெட், குடியிருப்புகளிலிருந்து நேரடியாக கழிவு நீர் கண்மாயில் கலந்து துர்நாற்றம், கொசு உற்பத்தி மையமாகவே இருக்கிறது. ஆகாய தாமரை செடிகள் கண்மாயை மாசடைய செய்கிறது.



கண்மாயை துார் வாரி, படகு குழாம் அமைத்து, கரைகளை செப்பனிட்டு சுற்றுலா தலமாக மாற்ற அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. அது அறிவிப்பு அளவில் மட்டும் உள்ளது.பொதுப்பணித்துறை முயற்சிகண்மாயை துாய்மைப்படுத்த பொதுப்பணித்துறைக்கு நிதி கிடைக்காததால் தனியார் அமைப்புகளுடன் இணைந்து துாய்மைப்படுத்த கலெக்டர் வினய் ஒப்புதல் வழங்கினார்.



இதையடுத்து தானம் அறக்கட்டளை, கோமதிபுரம் குடியிருப்போர் நலச்சங்கம், நடையாளர் கழகம், குமார் நினைவு இளைஞர் சங்கம், குரு மருத்துவமனை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து கண்மாயை துாய்மைப்படுத்த பொதுப்பணித்துறையுடன் கைகோர்த்துள்ளனர்.



முதற்கட்டமாக கண்மாயில் பல ஏக்கரில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றும் பணி நடக்கிறது. இப்பணியை பொதுப்பணித்துறை மேலுார் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் எம்.சுகுமார், உதவி பொறியாளர் சந்தனகுமார், ஆய்வாளர் மோகன் ஆய்வு செய்தனர்.



ஆகாய தாமரை உரம்கண்காணிப்பு பொறியாளர் கூறியதாவது: நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கண்மாயில் 22 செயற்கை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கழிவு நீரை சுத்திகரித்து நிலத்திற்குள் அனுப்பும். துாய்மை பணியின் போது அகற்றப்படும் ஆகாய தாமரையை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X