| மதுரை நகரில் பழுதடைந்த ரோடுகள் சீரமைக்கப்படுமா? 2020ல் விடியலை எதிர்நோக்கி மக்கள் Dinamalar
மதுரை நகரில் பழுதடைந்த ரோடுகள் சீரமைக்கப்படுமா? 2020ல் விடியலை எதிர்நோக்கி மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
06:41

மதுரை: மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த ரோடுகளை இந்த ஆண்டாவது சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



நகரில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் ரோடுகள் உள்ளன. மாநகராட்சி வசம் உள்ள ரோடுகளின் நீளம் மட்டும் 1572.52 கி.மீ., இதில் தரமான ரோடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேடு, பள்ளம் நிறைந்த ரோடுகளே பிரதானமாக உள்ளன. பாதாள சாக்கடை கசிவு, குழாய்களை சீரமைக்க ரோடுகளை தோண்டுவது, மழைநீர் தேங்குவது என பல காரணங்களால் ரோடுகள் பெயர்ந்து சேதமடைந்துவிட்டன. இதில் பயணம் செய்வதே பெரும் சவாலானது. 'கரணம் தப்பினால் மரணம்' என்ற கதியில் தான் ரோடுகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.



பைபாஸ் ரோடு சாலை முத்து நகர் பிரதான ரோடு, ஜெயில் ரோடு, சொக்கலிங்கநகர் ரோடு, மாசி வீதிகள், கோச்சடை நடராஜர்நகர் ரோடு, இ.பி.,காலனி ரோடு என எந்த ரோடும் புதுப்பிக்கப்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநில அரசிடம் நிதி கோரி திட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். நிதி கிடைத்ததும் ரோடு பணி நடக்கும். அவசியம் கருதி பிரதான ரோடுகளில் தற்காலிக சீரமைப்பை மேற்கொள்கிறோம்' என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X