நாங்களே பார்த்துக்கிறோம்! தாமஸ் கிளப் நிர்வாகம் இனி அரசு வசம்:முடிவுக்கு வந்தது சங்கத்தினர் சகாப்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 ஜன
2020
02:03
பதிவு செய்த நாள்
ஜன 17,2020 23:40

கோவை:அரசுக்கு சொந்தமான தாமஸ் கிளப் இடத்தில், அரசுக்கு எதிராக செயல்படும் சில அமைப்பினர் கூட்டம் நடத்தி வந்தததையடுத்து, கிளப் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.


கோவை கலெக்டர் அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ளது தாமஸ் கிளப். அரசுக்கு சொந்தமான இந்த இடம், வருவாய்த்துறை ஊழியர்களின் மனமகிழ் மன்றமாக, 1932ல் உருவாக்கப்பட்டது.முன்னாள் கலெக்டரான தாமஸ் பெயரில் அமைக்கப்பட்ட இந்த கிளப்பில், மற்றொரு முன்னாள் கலெக்டரான சிவக்குமார் பெயரில், அரங்கம் உள்ளது.இந்த வளாகம், இதில் அமைந்துள்ள கட்டடங்களை, அரசு ஊழியர் சங்கத்தினர் பயன்படுத்தி வந்தனர்.


அரசு ஊழியர் சங்க நடவடிக்கைகளின் மையமாகவே, இந்த வளாகம் இருந்து வந்தது. அவ்வப்போது, இலக்கியம், சமூக அமைப்பு என்ற பெயரில் செயல்படுவோரும் கூட்டம் நடத்துவர்.சங்கத்தினர் சார்பில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, டி.என்.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.


போலீசார் எதிர்ப்புஅரசுக்கு எதிராக செயல்படும் அமைப்பினர் கூட்டம் நடத்தவும், இந்த வளாகத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து, தாமஸ் கிளப் நிர்வாகத்தை சீர்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்படி, கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி, கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) தலைமையில், கிளப் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை, அனைத்து நிலை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.தாமஸ் கிளப்புக்கு சிறந்த நிர்வாகத்தை அளித்து, அதன் மாண்பினை காப்பது என்றும், அதற்கு வசதியாக தேர்தல் நடத்தி, நிர்வாகக்குழுவை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


அதற்கு முதல் படியாக, கோவையில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அனைவரையும் கிளப் உறுப்பினர்கள் ஆக்கி, அவர்களை கொண்ட வாக்காளர் பட்டியல் தயார் செய்வது என்றும், முடிவு செய்யப்பட்டது.தங்குமிட வசதிஇவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு மூலம், தாமஸ் கிளப்பை மேம்படுத்த, அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது என்று, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.'வெளியூர்களில் இருந்து வரும் வருவாய்த்துறை அலுவலர்கள், அதிக வாடகை கொடுத்து ஓட்டல்களில் தங்குகின்றனர். அவர்கள் குறைந்த வாடகையில் தங்கிக்கொள்ளும் வகையில், தாமஸ் கிளப்பில் வசதிகள் செய்யப்படும்' என்று, அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran - coimbatore,இந்தியா
18-ஜன-202006:15:36 IST Report Abuse
Ramachandran இது போல் எல்லாரும் அவர்கள் வேலையே அர்களே பார்த்து கொண்டால் பொருளாதாரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X