ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் மகோற்சவ விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
01:38

க.க.சாவடி:பிச்சனுாரிலுள்ள ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் பொங்கல் மகோற்சவம் முன்னிட்டு, நேற்று திரளான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர்.க.க.சாவடியிலிருந்து வேலந்தாவளம் செல்லும் வழியில், பிச்சனுார், ரங்கசமுத்திரம் பிரிவில், ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பொங்கல் விழா முன்னிட்டு, தை முதல் மற்றும் இரண்டாம் நாளில் பெரிய அபிஷேகம் நடக்கும்.இந்நிகழ்ச்சி இவ்வாண்டு கடந்த 15ல் துவங்கியது. துவக்கமாக, சிவனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து மூதாதையர் சமாதியில் பொங்கல் படையல் வைக்கப்பட்டு உத்தரவு பெறப்பட்டது.சிவனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இரவு அலங்காரம் அகற்றப்பட்டு, கோவில் நிர்வாகி ஜெகன்னாதன் சுவாமிகள், 200 லிட்டர் பாலில் அபிஷேகம் செய்தார். தொடர்ச்சியாக விவசாயிகள், பாலாபிஷேகம் செய்தனர்.நேற்று நடந்த பாலாபிஷேகம் மற்றும் பிரார்த்தனைக்கான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில், ஆடு, மாடு, கோழி, மனித உருவங்கள், உறுப்புகள் உள்ளிட்ட பொம்மைகளை படைத்து, விளக்கேற்றி, பக்தர்கள் வழிபட்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தீர்த்தவாரியும், நாளை தரிசனம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கின்றன.அதுபோல, போத்தனுாரை அடுத்த மேட்டூர், கணேசபுரத்திலுள்ள மூரண்டம்மன் கோவிலில், காணும் பொங்கல் முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X