லைப் அண்டு ஸ்டைல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
01:53

'வெல்ல நினைத்தால் வெல்லலாம்'குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும், தங்களுக்கான இலக்கை, தேவையை அடைய முயற்சிதான் முக்கியம். இதுபோன்ற நிறைய தகவல்களை உள்ளடக்கி, நம்பிக்கையும் உற்சாகமும் தரும், 'வெல்ல நினைத்தால் வெல்லலாம்' என்ற நுால் இன்று வெளியிடப்படுகிறது. மத்திய மண்டல ஐ.ஜி., அமல்ராஜ் எழுதியுள்ளார். காலை, 10:15 மணிக்கு, பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் உள்ள, 'டி' அரங்கில் நிகழ்ச்சி நடக்கிறது. விஜயா பதிப்பகம் சார்பில் நடக்கும் இவ்விழாவில், கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.மனசுக்கு இதமாகும் இசைகோவையில் உள்ள தியாகப் பிரம்ம கானாஞ்சலி அமைப்பு சார்பில், 66 ம் ஆண்டு உற்சவம், புரூக்பாண்ட் ரோடு - பட்டேல் ரோடு சந்திப்பு, கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, சரோஜினி நடராஜன் கலையரங்கில் இன்று மாலை, 4:45 மணிக்கு நடக்கிறது. இதில், விஜய்சிவா பாட்டுக்கு, முல்லைவாசல் சந்திரமவுலி வயலின், பிரசாத் மிருதங்கம் மற்றும் கிருஷ்ணா கடம் வாசிக்கின்றனர். விடுமுறையை இசையோடு இதமாக கழிக்கலாம்.ஜுவல் கண்காட்சிகலஷா பைன் ஆர்ட்ஸின் தனித்துவமிக்க பிரத்யேக கைவினை தங்கநகை கண்காட்சி, கோவையில் நடக்கிறது. அவிநாசி ரோட்டில் உள்ள, ரெஸிடென்சிஓட்டல் வளாகத்தில் நடக்கும் இக்கண்காட்சியில், தங்கம், வைரம், ஜடாவு, வெள்ளி மற்றும் ஆடம்பர நகைகள் எண்ணற்ற டிசைன்களில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி இன்று நிறைவடைகிறது. காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், பிடித்த நகைகளைவாங்கி மகிழலாம்.தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள்கோவையில் நடந்து வரும் சங்கீத பிதாமகர் புரந்தரதாசர் மற்றும் ஸத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை இசை விழாவில், கர்னாடகம் மற்றும் தெலுங்கு கீர்த்தனைகள் ஒன்றாக சங்கமித்திருக்கின்றன. இந்த இசைவிழா, சாய்பாபா காலனி, கே.கே.புதுார், சிந்தாமணி நகரில் உள்ள, சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் நடக்கிறது. இதில், இன்று காலை, 8:45 மணிக்கு, கிருஷ்ணா நாட்டிய கலாேஷத்ரா மாணவ, மாணவியரின் நாட்டியமும், 9:15 முதல் இரவு, 8:00 மணி வரை, இசைக் கலைஞர்களின் பாட்டு, வீணை, வயலின், கீ போர்டு வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.கம்பு சுத்த கத்துக்கலாமாதடாகம் ரோடு, வேலாண்டிபாளையத்தில் செயல்படும், குறிஞ்சி - யாழ் கலை இலக்கிய பண்பாட்டு மையம் சார்பில், சிறுவர் முதல் அனைத்து வயதினருக்கும் சிலம்பம் மற்றும் ஒயிலாட்டம் ஆட பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி, வேலாண்டிபாளையம் அருகே கோவில்மேடு, கூலி நெசவாளர் காலனியில் உள்ள, மைதானத்தில் கற்றுத்தரப்படுகிறது.'அறிவுத் திருநாள் தமிழர் திருநாள்'பொங்கல், திருவள்ளுவர் விழா முன்னிட்டு, தமிழ்நாடு இலக்கிய பேரவை சார்பில், இன்று திருக்குறள் ஒப்புவித்தல், கவியரங்கம் மற்றும் 'அறிவுத் திருநாள் தமிழர் திருநாள்' என்ற தலைப்பில், சிறப்புரை நடக்கிறது. இந்நிகழ்ச்சி, ராமநாதபுரம், கணேசபுரம், ராமசாமி வீதியில் உள்ள, பொதுஜன சங்கம் நடராஜா வாசகசாலை அறக்கட்டளை வளாகத்தில் இன்று, காலை, 10:00 மணி முதல் நடக்கிறது.கவியரங்கம் கருத்தரங்கம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடக்கிறது. இன்று மாலை, 5:30 மணிக்கு, வேலாண்டிபாளையம் கலாமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 'ஜீவா இன்றிருந்தால்' எனும் கவியரங்கம் நடக்கிறது. பேராசிரியர் திலிப்குமார் தலைமை வகிக்கிறார். கவிஞர்கள் பலர் கவிதை வாசிக்கின்றனர். கருத்தரங்கத்துக்கு, எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் தலைமை வகிக்கிறார். புருசோத்தமன், கோவிந்தசாமி, பழனிசாமி, பூர்ணிமா நந்தினி, வரதராஜன், ஞானகுமார் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்குகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X