ரூ.1.10 கோடி மதிப்பு தங்கம், டாலர்கள் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
03:35

சென்னை: இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள், டாலர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கொழும்புவில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, சென்னை வந்தது.அதில் வந்த, இலங்கையைச் சேர்ந்த, அஞ்சனா நீரஜ், 37, கலந்தர் இர்பான், 21, ஆகிய இருவரிடமும் நடந்த சோதனையில், இருவரது ஆசன வாய்களில் இருந்து, 23.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 564 கிராம் தங்கக் கட்டிகள்பறிமுதல் செய்யப்பட்டன.மற்றொரு சம்பவத்தில், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 8:55 மணிக்கு, பாங்காக் செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் புறப்பட தயாராக இருந்தது.அதில் செல்ல வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த, ராமநாதன், 27, என்பவரை சோதனையிட்ட போது, அவரது கைப் பைகளுக்குள் இருந்து, அமெரிக்கா டாலர், மலேஷியா ரிங்கிட் மற்றும் யூரோ டாலர்கள், இந்தியா மதிப்பில், 10.83 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல், இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று பிற்பகல், 3:25 மணிக்கு, சென்னை வந்தது. அதில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த, ஹமீது பாதுஷா, 37, யாசர் அராபத், 20, அசருதீன், 34, யூசுப்மவுலானா, 42, ஆகிய நான்கு பேரிடமும்,சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதில், 38.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 947 கிராம் தங்கக் கட்டிகள், நகைகள், பறிமுதல்செய்யப்பட்டன.மேலும், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை, 4:55 மணிக்கு சென்னை வந்தது.அதில் வந்த, இலங்கையைச் சேர்ந்த மரியா கிரஷாந்தி, 53, பாத்திமா கனி, 51, ஆகிய இரு பெண்களிடம் நடந்த சோதனையில், இருவரது உள்ளாடைகளுக்குள் இருந்து, 38.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 941 கிராம் தங்கக் கட்டிகள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X