மக்கள் வெள்ளத்தால் திணறியது சென்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
03:38

சென்னை: காணும் பொங்கலான நேற்று, சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள் வெள்ளத்தால் சென்னை திணறியது.



சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள், பொங்கல் விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு சென்றதால், பரபரப்பாக இயங்கும் சாலைகள், 'டல்' அடித்தன.காணும் பொங்கலான நேற்று காலை முதலே, மக்கள், மெரினா, வண்டலுார், தீவுத்திடல், மாமல்லபுரம், தியேட்டர், பூங்கா, கோவில் என, குடும்பம் குடும்பமாக, படையெடுக்க துவங்கி விட்டனர்.




நெரிசலில், சிறுவர்கள் காணாமல் போனால், கண்டு பிடிக்க வசதியாக, சிறுவர்களின் கைகளில், மொபைல் எண்ணுடன் கூடிய,'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது.மெரினாகாஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர், குடும்பத்தாருடன், மெரினா, எலியட்ஸ் கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி நடைபெறும் தீவுத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்தனர்.மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலையில் இருந்து, கலங்கரை விளக்கம் வரை, மக்கள் கூட்டம் அலைமோதியது.



குழந்தைகள், முதியவர்களுடன் ஆடி, பாடி குதுாகலித்தனர். பெற்றோரும் குழந்தைகளாகவே மாறி, தங்களது குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். மெரினா, எலியட்ஸ் மற்றும் வி.ஜி.பி., போன்ற தனியார் கேளிக்கை பூங்காக்களில், பாதுகாப்புக்கு, 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். கடலில் குளிப்பதை தடுக்க, கடற்கரை ஓரம், தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. திருட்டு போன்ற சம்பவங்களை முறியடிக்க, போலீசார், உயர் கோபுரங்கள் மூலமும், பைனாக்குலர் கருவி மூலமும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



பொதுமக்களுக்கு உதவ, காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.121 குழந்தைகள் மீட்புகாணும் பொங்கலை கொண்டாட, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நேற்று, மெரினா கடற்கரைக்கு வந்த குழந்தைகள், கூட்ட நெரிசலில் காணாமல் போயினர். கூட்டத்தில் காணாமல் போவதை தடுக்க, குழந்தைகள் கைகளில், அடையாள அட்டைகளை போலீசார் கட்டி விட்டனர். இதனால், 121 குழந்தைகளை மீட்கப்பட்டு, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்கப்பட்டனர்



வண்டலுார்



காணும் பொங்கல் அன்று, வண்டலுார் உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. பூங்கா நிர்வாகத்தின், சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இதற்கு காரணமாகும். கடந்தாண்டு, காணும் பொங்கல் அன்று, 47 ஆயிரம் பேர், பூங்காவை கண்டு ரசித்தனர். இந்தாண்டு, எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பூங்காவினுள், 'பயோ டாய்லெட்' சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பேருந்து வசதி, வாகன நிறுத்தம், கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில், போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளி பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டதோடு, மூன்று சக்கர சைக்கிள்களும் வழங்கப்பட்டன. நேற்று மட்டும், 55 ஆயிரம் பேர், பூங்காவை கண்டு ரசித்தனர்.



காசிமேடு


காசிமேடு கடற்கரையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால், அப்பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. நேற்று மதியம், 12:00 மணி முதலே, மக்கள், குடும்பத்தினருடன் திரண்டு வந்தனர். பொதுமக்கள் வசதிக்காக, இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் வசதி செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பாறையில் அமர, இம்முறை அனுமதி மறுக்கப்பட்டது.வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதை தவிர்க்க, தடுப்புகள் அமைக்கப்பட்டதோடு, ஆயுத படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


திருவொற்றியூர்



திருவொற்றியூரின், தேரடி, மார்க்கெட், அஜாக்ஸ், எண்ணுார், கத்திவாக்கம் பஜார், மணலி மார்க்கெட் போன்ற பிரதான சாலைகள் வெறிச்சோடின. பல கடைகள் திறக்கப்படாததால், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர்.வடசென்னையில், எண்ணுார் தாழங்குப்பம் கடற்கரை, ராமகிருஷ்ணா கடற்கரை, கே.வி.கே., குப்பம் கடற்கரை, ஒண்டிக்குப்பம் கடற்கரை மற்றும் வடிவுடையம்மன் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X