அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வமில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
03:55

கல்வித்துறை சார்பில் 62வது குடியரசு தின விழா குழு விளையாட்டு போட்டிகள் மதுரையில் நடந்தன. ஹாக்கி, கபடி, வாலிபால், ஹேண்ட் பால் என ஒன்பது வகை குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.



மாணவர்கள், மாணவிகளுக்கு என தனித்தனியே நடந்த ஐந்து நாட்கள் போட்டியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்போட்டிகளை மாவட்ட கல்வித்துறை முழு பொறுப்பேற்று நடத்தியது.போட்டிகளை நடத்திய மதுரைக்கு பேட்மிட்டன் பெண்கள் பிரிவில் அவ்வை மாநகராட்சி பள்ளி 2ம் இடமும், ஹாக்கியில் ஏ.சி., பள்ளி 2ம் இடமும் பெற்றன. தனபால் மேல்நிலை பள்ளி ேஹண்ட்பாலில் 4ம் இடம் பெற்றது. தவிர வெற்றி பெற்ற பட்டியலில் அரசு பள்ளிகள் பெயர் இல்லை. மாநில அளவில் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அதேநேரம் வெளி மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் முதலிடத்தை வென்றனர்.



ஆசிரியர்கள் கூறியதாவது:இயக்குனர், செயலர் என அதிகாரிகள் முகாமிட்டதால் போட்டிகளை கவனமாக நடத்த வேண்டும் என்பதில் மட்டுமே அதிகாரிகள் அக்கறை காட்டினர். அதேநேரம் மதுரை மாணவர்களை மாநில போட்டிக்கு தகுதி பெற வைக்க வேண்டும் என்ற பொறுப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. போட்டிகளில் பங்கேற்க தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனரா என்பதிலும் முழு கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.இதனால் மாநில போட்டியில் மதுரையால் சாதிக்க முடியாமல் போனது. மாணவர்களை தயார்படுத்துவதில் மெத்தனம் ஏற்பட்டதா என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

மதுரையில் நடந்த மாநில குழு விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாததும், குறிப்பிடும் வகையில் பதக்கங்களை அள்ளாததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X