தோல்வி தோற்றுப்போக... அடிடா... எதிர்நீச்சல்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
09:23
'கரை புரண்டு ஓடும் வெள்ளம்... வேடிக்கை பார்க்க சென்ற நீங்கள், ஆற்றில் விழுந்து விட்டீர்கள். தண்ணீர் போகும் போக்கில் சென்றால், வாழ்க்கை முடிந்து விடும். என்ன செய்வீர்கள்...?' - - எட்டாம் வகுப்பு ஆசிரியர் குமாரசாமி கேட்டபோது, 'எதிர்நீச்சல் அடிப்பேன்' என்றார், மாற்றுத்திறனாளியான மாணவர் செந்தில்வேல்.இன்று செந்தில்வேல், மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் ஆசிரியர். ''பிரச்னைகளை எதிர்த்து வெற்றி காண வேண்டும். இதை உணர்த்த, நான் எனது மாணவர்களுக்கு, எதிர்நீச்சல் போடும் வித்தையை கற்பிக்கிறேன்,'' என்கிறார் அவர்.


எப்படி இப்படி ஒரு நெஞ்சுரம் வாய்த்தது?

மூன்றாவது வயதில் போலியோவால், இரு கால்களும் செயலிழந்தன. தாய் பாக்கியம், அக்கா அன்னபூரணி தான், பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்வர்.'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதி வரிகளை கேட்கும் போதெல்லாம், மைதானத்திற்குள் புரண்டு விளையாட வேண்டுமென, ஏக்கமாக இருக்கும்.கால்கள் இல்லாவிட்டாலும், கற்பனையில் உசேன்போல்டுக்கு 'டப்' கொடுக்கும் அளவுக்கு ஓடுவதாக நினைத்துக் கொள்வேன். புத்தகம் தான் பெஸ்ட் பிரெண்ட். புத்தகம் தந்ததுதான் நீங்கள் சொல்லும் நெஞ்சுரம்.சரி...


இந்த ஆசிரியர் வேலை கிடைத்தது எப்படி?

2013ல் கல்லுாரி படிப்பு முடிந்தவுடன், அரசுப்பணிக்கான பயிற்சி துவங்கியது. ஒரு மார்க்கில் பலமுறை வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்; தன்னம்பிக்கையை மட்டும் இழந்ததில்லை.2015ல், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக பணியில் சேர்ந்தேன். அடுத்த ஆண்டே, சிறப்பு டெட் எழுதி இதோ இப்ப ஆசிரியர்.


மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு உங்கள் ஆலோசனை?

எங்களுக்கு, ஏதாவது சிறப்பு திறனை கடவுள் கொடுத்திருப்பார். அதை கண்டறிவது பெற்றோரின் கடமை. துண்டு பேப்பரையும் விடாமல் படித்ததால், பிளஸ் 2 வரை, என் அம்மா இடுப்பில் சுமந்தபடியே பள்ளிக்கு அழைத்து சென்றார்; இன்று நான் ஆசிரியராகி விட்டேன்.எக்காரணம் கொண்டும், படிப்பை நிறுத்தி விடாதீர்கள். தன்னம்பிக்கை வார்த்தைகளை பேசுங்கள். அதிதீவிர எதிர்கால சிந்தனை, எங்களை போன்றவர்களுக்கு இருக்கும். நேர்மறையான சிந்தனையாக அதை மாற்றுவது பெற்றோர், ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது.


மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான வகுப்பறை சூழல் குறித்து..

கட்டமைப்புகள் பரவாயில்லை. தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் அக்கறையும், அன்பும் காட்டி வழிகாட்டினால், எதிர்காலம் சிறக்கும்.


இன்று நீங்கள் ஒரு ஆசிரியர். உங்களை வடிவமைத்த ஆசிரியர் யார்?

என் எட்டாம் வகுப்பு ஆசிரியர் குமாரவேல். அவர் அடிக்கடி கூறும் வார்த்தை, 'யாருடைய அனுதாபத்திற்கும் ஆளாகாமல், பிறர் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்ந்து காட்ட வேண்டும்' என்பது தான். இதுபோன்ற ஊக்கமளிக்கும் வார்த்தைகள், சிறப்பு குழந்தைகளின் வாழ்க்கையில் ஊன்று கோலாக இருக்கும்.
ஆசிரியப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்காக, உங்களின் பங்களிப்பு என்ன?

கண்பார்வை குறைபாடுள்ள பொதுத்தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு, ஆடியோ வடிவில் பாடத்திட்டம் எளிமையாக்கியுள்ளேன். அரசுப்பணிக்காக தயாராவோருக்கு வழிகாட்டி வருகிறேன்.காரமடை ஒன்றியத்தில் உள்ள, 26 பள்ளிகளில் படிக்கும், மாற்றுத்திறன் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கை வார்த்தைகளை விதைத்து வருகிறேன்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜன-202013:09:54 IST Report Abuse
Krishnan B Well done and Well said Mr.Senthilvel
Rate this:
Share this comment
Cancel
18-ஜன-202010:28:42 IST Report Abuse
Shanmugam subramani super nanpa great
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X