டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி: உறவினர்கள் மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2020
00:00

புதுச்சேரி: மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியை மேற்கொண்ட ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தார்.புதுச்சேரி, நைனார்மண்டபம், திவான் கந்தப்ப நகரை சேர்ந்தவர் அய்யப்பன், 55; இவரது மனைவி மகேஸ்வரி, 45; இவர்களுக்கு, ஷாலினி, 23; பவித்ரா, 15; என்ற மகள்களும், தயாநிதி, 22; என்ற மகனும் உள்ளனர். அய்யப்பன், புதுச்சேரி மின்துறை, முருகங்கப்பாக்கம் கிளை அலுவலகத்தில் ஒயர் மேனாக பணியாற்றி வந்தார்.நேற்று காலை 9:45 மணிக்கு, முருங்கப்பாக்கம், சுதானா ஆர்ச் எதிரில் உள்ள மின்மாற்றியில், உயர்மின் அழுத்த பாதையில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் அய்யப்பன் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.அதில் துாக்கி வீசப்பட்ட அய்யப்பன், சாலையோர கழிவுநீர் வாய்க்கால் கட்டை மீது விழுந்தார். அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடன், அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.இதுபற்றி தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அய்யப்பன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது, அய்யப்பன் பணியின் போது இறந்ததால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உறுதிமொழி அளித்தால் மட்டுமே, உடலை வாங்குவோம் என சக ஊழியர்கள் மற்றும் அய்யப்பன் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீதர், அய்யப்பன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனையேற்று அய்யப்பன் உடலை அவரது குடும்பத்தினர் பெற்று சென்றனர்.சாலை மறியல்இறந்த மின்துறை ஊழியர் அய்யப்பன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிநேற்று மாலை 6:00 மணிககு பா.ம.க.,வை சேர்ந்த கோபாலக்கிருஷ்ணன் தலைமையில் கடலுார் சாலையி்ல மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், இதுகுறித்து அரசிடம் பேசி முடிவு தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். அதனையேற்று மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் கடலுார் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X