தற்கொலை, பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2020
02:05

விபத்தில் முதியவர் உயிரிழப்பு



கொரட்டூர்: கொளத்துார், சத்யா நகரைச் சேர்ந்தவர் பெருமாள், 70; பெயின்டர். இவர், வேலை முடித்து, நேற்று முன்தினம் மாலையில், பாடி மேம்பாலத்தில் நடந்து சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவஇடத்திலேயே பலியானார். திருமங்கலம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.மாணவன் துாக்கிட்டு பலிவளசரவாக்கம்: வளசரவாக்கம், கைகான் குப்பத்தைச் சேர்ந்தவர் மோகனா, 42. இவரது மகன் சீனிவாசன், 17. குன்றத்துாரில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். இவர், ஸ்டைலாக அளவுக்கு அதிகமாக முடி வளர்த்து இருந்தார் எனக் கூறப்படுகிறது.இதனால், சீனிவாசனின் தாய், நேற்று முன்தினம், சலுான் கடைக்கு அழைத்துச்சென்று, தலை முடியை வெட்டச் சொல்லியுள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன், நேற்று, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.



கட்டட தொழிலாளி இறப்பு



நொளம்பூர்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் குலாம், 40; கட்டட தொழிலாளி. இவர், நொளம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். 15ம் தேதி, இரண்டாவது தளத்தில் வேலை செய்தபோது, கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று இறந்தார். நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



ஏரியில் குதித்து காவலாளி தற்கொலை



துரைப்பாக்கம்: திருவான்மியூர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சேகர், 60; தனியார் நிறுவன காவலாளி. சில மாதமாக, நோய் பாதித்து அவதிப்பட்டுள்ளார். இதில் மனமுடைந்த சேகர், நேற்று, பெருங்குடியில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.



இளம்பெண் மர்ம மரணம்



பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர் மகள் பொன்மொழி, 21. கல்லுாரி படிப்பை முடித்து, வீட்டில் இருந்தார். நேற்று காலை, துாக்கத்தில் இருந்து எழும்பவில்லை. மரணமடைந்து கிடந்தார். மரணத்தில் சந்தேகம் இருந்ததால், பள்ளிக்கரணை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை அறிக்கை வந்தபின், மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.



வாலிபர் துாக்கிட்டு தற்கொலை



எண்ணுார்: எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் தினேஷ், 25; கூலி தொழிலாளி. இதய நோயால், அவதிப்பட்டு வந்தவர், அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், தினேஷுக்கு, அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.நேற்று காலை, வலி தாங்காமல், நான்கு மாடியில் உள்ள, வீட்டின் ஜன்னலில் துாக்கிட்டு, பால்கனியில் தொங்கியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த, எண்ணுார் போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X