8 இடங்களில் அடுத்தடுத்து திருட்டு கோட்டை விட்ட போலீசார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2020
02:05

ராஜமங்கலம்: இரண்டு நாட்களில், எட்டு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களால், போலீசார் திணறியுள்ளனர்.



கொளத்துார் அருகே உள்ள தாதாங்குப்பத்தில்,17ம் தேதி இரவு, ஒரு கோவில், மூன்று வீடுகள்,ஒரு கடை என, அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தன.இதில், சுந்தர், 31, என்பவரின் இருசக்கர வாகனம், கமல், 40, என்பவரது கடையில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய், மடிக்கணினி, மொபைல்போன் திருடு போயின.மேலும், தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்து, 14 ஆயிரம் ரூபாய் திருடு போனது. சுரேஷ், 49, என்பவரது வீட்டு கதவை உடைத்து, கொள்ளை முயற்சி நடந்தது.



இதைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக, நேற்று முன்தினம் இரவு, ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள செந்தில் நகரில், அடுத்தடுத்து, மூன்று வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தன.இதில், ஜெயந்தி, 60, என்பவரது வீட்டில், 6 சவரன் நகை, ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டில், 5 சவரன் நகை, 7,000 ரூபாய் திருடு போனது. மேலும், ஜெயந்தி வீட்டிற்கு கீழ்தளத்தில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது.இரண்டு நாட்களில், ஒரு கோவில், கடை, ஆறு வீடுகளை உடைத்து, 11 சவரன் நகை, 31 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை ஆட்டைய போட்டு சென்ற மர்ம நபர்களால், போலீசார் கதிகலங்கி போயுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X