நெல்லிக்குப்பம் மகாவீர் சிலை: வரலாற்று ஆய்வாளர் பார்வை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
01:22

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் மகாவீர் சிலை இருப்பது, இப்பகுதியில் சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றாக விளங்குகிறது என, வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளார்.



சமண மத வரலாற்று ஆய்வாளர் பேரணி ஸ்ரீதரன், கடலுார் ஜெயசுந்தர், ஜீவகுமார், ஜினேந்திரகுமார் ஆகியோர் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலை பார்வையிட்டனர். அப்போது பேரணி ஸ்ரீதரன் கூறியதாவது:கி.பி.ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குளத்தில், சமண மத கடவுள் மகாவீர் கருங்கல் சிலை, 15 ஆண்டுகளுக்கு முன் கிடைத்துள்ளது. அந்த சிலைக்கு பூஜைகள் நடக்கவில்லை. கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகத்தின் போது மகாவீர் சிலையை கோவிலின் உள்ளே வைத்து பூஜை செய்ய துவங்கியுள்ளனர்.



தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முன் சைவம், வைணவம், சமணம் பவுத்த மதங்கள் பரவி இருந்தன. குறிப்பாக சைவ, வைணவ மதங்களுக்கு முன், தொண்டை மண்டல நடுநாடான கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் சமண மதம் பெருமளவு மக்களின் மதமாக இருந்துள்ளது.பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சிக்கு முன் களப்பிரர்கள் ஆட்சியில் சமண மதத்தின் தாக்கம் அதிகம் இருந்துள்ளது. சைவக்குறவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் சமண மதத்தை தழுவி இருந்தபோது, பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சமணர்கள் அதிகம் வசித்துள்ளனர்.



நெல்லிக்குப்பம், வானமாதேவி, கொங்கராயனுார், கொரத்தி, காரம்பட்டு, திருவதிகை பகுதிகளில் அதிக சமண சமய தடயங்கள் உள்ளன. கைலாசநாதர் கோவிலில் உள்ள மகாவீர் சிலை ஒன்றரை அடி உயரம் ஒரு அடி அகலம் உடையதாக உள்ளது.சாமரதாரிகள், இயக்கன், இயக்கியர், முக்குடை, கற்பகமரம், திண்டு போன்ற ஜோடனைகள் ஏதும் இல்லாமல் இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அர்த்த பரியங்க ஆசன தவநிலையில் அருகன் அமைதியாக காட்சி தருகிறார்.இவ்வாறு அவர் கூறினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X