சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக மோசடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
01:27

கடலுார் : சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக 4.45 லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் மீது, நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத் தருமாறு, எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த பாலாஜி உள்ளிட்டோர் அளித்துள்ள மனு:கடலுார், திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் சேகர் மகன் கோகுல். இவரும், அவரது நண்பர்கள் நெய்வேலி தென்னரசு, பண்ருட்டி சதீஷ் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகியோர், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறினர்.அதை நம்பி நானும், கடலுாரை சேர்ந்த சுபாஷ், காதர், பிரசாந்த், கார்த்திகேயன், ஆனந்தபாபு ஆகியோர், கோகுலிடம் நேரடியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், அவரது வங்கிக் கணக்கில் 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயும் முன்பணமாக, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் செலுத்தினோம். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை.



பலமுறை தொடர்பு கொண்டு கேட்டபோதும், வேலைக்கு செல்ல ஆவணங்களை மட்டும் வழங்கினார். வேலைக்கு அனுப்பவில்லை. சந்தேகமடைந்து, உள்ளூர் ஏஜென்டிடம், கோகுல் வழங்கிய ஆவணங்களை காண்பித்தபோது, அவை போலி என தெரிந்தது.இதுகுறித்து கோகுலிடம் கேட்டபோது, 2 மாதங்களில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.



ஆனால் இதுவரை வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து வருகிறார்.எனவே, கோகுல், தலைமறைவாக உள்ள தென்னரசு, சதீஷ், பிரதீபா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு, மனுவில், கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X