போலீசாரின் மனைவி துாக்கிட்டு தற்கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2020
02:07

பட்டினப்பாக்கம்:முதல் திருமணத்தை, கணவர் மறைத்ததை அறிந்து, மனமுடைந்த காவலரின் மனைவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


பட்டினப்பாக்கம், காவலர் குடியிருப்பில் வசிப்பவர், அருள், 38; பரங்கிமலை, ஆயுதப்படையில் உள்ள, மோட்டார் வாகன பிரிவில், காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி, 30. இவர்களுக்கு திருமணமாகி, நான்கு மாதங்களே ஆன நிலையில், ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.பட்டினப்பாக்கம் போலீசார், உடலை மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து, ராஜேஸ்வரியின் உறவினர்கள், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதில், அருள் ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றதை மறைத்து, ராஜேஸ்வரியை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.மேலும், உறவுக்கார பெண்ணுடன், தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.


இதை அறிந்த ராஜேஸ்வரி, கணவரை கண்டித்துள்ளார். இருவருக்கும், அடிக்கடி பிரச்னை இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன், இது தொடர்பாக இரு வீட்டினரும், பேச்சு நடத்தி, தம்பதியை சேர்த்து வைத்தனர்.அதன் பிறகு, அருள் தன் மனைவியை நகை, பணம் கேட்டு, கொடுமைப் படுத்தியுள்ளார். இதனால், மனமுடைந்த அவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அருள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அருள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X