| வேகவதி ஆற்றில் மணல் திருட்டு Dinamalar
வேகவதி ஆற்றில் மணல் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜன
2020
23:25

காஞ்சிபுரம்:போலீசார் துணையுடன், வேகவதி ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாகவும், ஆற்று கரையோரம் வசிப்பவர்களின் வீடுகள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த முறைகேடான மணல் கடத்தலால், பாலாறு, செய்யாறு போன்ற நீர்நிலைகளில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.இந்த முறைகேடான மணல் கடத்தல் வழக்கில், நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்ததை அடுத்து, 2013ல் இருந்து இன்று வரை, மாவட்டத்தின் பல பகுதிகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.எனினும், வேகவதி ஆற்றிலிருந்து, இருசக்கர வாகனம், மாட்டு வண்டி, லாரிகளில், இரவு முழுவதும் மணல் கடத்தப்படுகிறது.


இந்த ஆற்றிலிருந்து பிள்ளையார்பாளையம் வழியாக, நகரின் பல்வேறு பகுதிக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது.சமீப மாதங்களாக, இரவு முழுவதும் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், இதனால், வேகவதி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களின் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மாவட்ட எஸ்.பி., அலுவலகம் பின்புறம் உள்ள வேகவதி ஆற்றிலிருந்தே மணல் எடுத்து செல்லப்படுவது, வேதனையாக இருப்பதாக, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X