மர்ம பொருள் வெடித்து பெண் காயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
00:08

பம்மல் நகராட்சியில், மர்ம பொருள் வெடித்ததில், பெண் காயமடைந்தார். இதற்கு காரணமானோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


சென்னை, பம்மல் நகராட்சிக்குட்பட்ட, சங்கர் நகர், 22வது தெருவில், நேற்று காலை, 10:00 மணிக்கு, ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள், சாலையோர குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.சங்கர் நகர் காவல் நிலைய பழைய கட்டடம் எதிரே, குப்பை அகற்றும்போது, மர்ம பொருள் ஒன்று, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், தேவகி, 40, என்ற பெண் ஊழியர், துாக்கி வீசப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, சிறு காயங்களுடன் தப்பினார்.சக ஊழியர்கள், அவரை, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ், சங்கர் நகர் ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா ஆகியோர், சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை நடத்தினர்.


இதில், சாலையோர குப்பையில், 250 கிராம் அளவிற்கு, வெடி பொருள் தயாரிப்பு, சினிமா ஷூட்டிங் மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பாஸ்பரஸ் துகள்கள் கிடந்தது தெரிய வந்தது.இதற்கிடையில், அவை மீண்டும் வெடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, அவற்றை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.


ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு, வெள்ளை பாஸ்பரஸ் துகள்களை எடுத்து, தண்ணீரில் மூழ்கடிக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. ஜே.சி.பி., இயந்திரம், சிறிய துகள்களை எடுத்து, தண்ணீரில் போட்டபோது, அடுத்தடுத்து ஆறு முறை, பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால், பயந்துபோன ஓட்டுனர், பாதியிலேயே விட்டு விட்டு சென்றார். இதையடுத்து, வேறு ஒரு ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு, எஞ்சிய துகள்களை, தண்ணீரில் மூழ்கடித்தனர்.


பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் தன்மையுடைய, வெள்ளை பாஸ்பரஸ் துகள்களை சாலையில் கொட்டிய நபர் குறித்து தெரியவில்லை.மர்ம நபர்கள் யாராவது கொட்டினரா அல்லது கெமிரக்கல் தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வந்து கொட்டப்பட்டதா என்பது குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடரும் சம்பவம்


வெடி விபத்து குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:சங்கர் நகரில், தனியார் பள்ளி, காவல் நிலையம், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அப்படியிருக்கையில், சாலையோரத்தில் வெள்ளை பாஸ்பரஸ் கொட்டுவது என்பது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதேநேரத்தில், வெள்ளை பாஸ்பரஸ் வெடிப்பது, இது இரண்டாவது சம்பவமாகும். இரண்டு நாட்களுக்கு முன், இரண்டாவது குறுக்கு தெருவில், உணவு வினியோகம் செய்யும் வாலிபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வெள்ளை பாஸ்பரஸ் வெடித்து, கீழே விழுந்தார். இதில், அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. வாகனமும் எரிந்தது.


இந்நிலையில், இரண்டாவது சம்பவம் நடந்துள்ளது. சாலைகளில் குழந்தைகள் விளையாடும் போதோ, பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் போது, வெடித்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும்.சாலைகளில் வெள்ளை பாஸ்பரஸ் கொட்டியோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், மற்ற சாலைகளிலும் வெள்ளை பாஸ்பரஸ் துகள்கள் உள்ளதா என்பதை காவல் துறையினரும், நகராட்சியினரும் ஆய்வு செய்து, பொதுமக்களின் அச்சத்தை நீக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X