முதன்முறையாக காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி : பெருங்களத்தூர் பேரூராட்சி அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஜன
2020
15:21
பதிவு செய்த நாள்
ஜன 24,2020 00:21

தமிழகத்திலேயே முதன் முறையாக, தாம்பரம் அடுத்த பெருங்களத்துார் பேரூராட்சியில், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மனித வாழ்விற்கு அவசியமான தண்ணீரின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாறுபாடு, காடுகள் அழிக்கப்படுவது, சுற்றுச்சூழல் மாசு உட்பட, பல்வேறு காரணங்களால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.இதனால், 15 ஆண்டுகளுக்கு முன், இலவசமாக கிடைத்த குடிநீர், தற்போது, லிட்டர், 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்களுக்கு, தரமான குடிநீர் வழங்க வேண்டிய அரசே, குடிநீரை விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஆறு, குளம், ஏரி என, அனைத்து நீர் நிலைகளும் மாசடைந்து வருவதால், மக்கள் குடிப்பதற்கு, 'கேன்' தண்ணீரை வாங்குவது அதிகரித்து வருகிறது.கேன் குடிநீருக்காக, விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீரை எடுப்பது அதிகரித்துள்ளதால், பல மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்று வருகிறது.


நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாப்பதை, 2018ல் பொய்த்த வடகிழக்கு பருவமழை, நமக்கு உணர்த்தியது.அந்த ஆண்டு, மழை இல்லாததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வறண்டன. நிலத்தடி நீரும் கிடைக்காததால், 2019 ஏப்., மற்றும் மே மாதங்களில், சென்னை மற்றும் புறநகரில், கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. ஓட்டல்கள், ஐ.டி., நிறுவனங்கள் பலவற்றிற்கு, விடுமுறை அளிக்கப்பட்டது.


அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளால், அடுத்த சில நாட்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.அதேநேரம், வரும் காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க, நீர்நிலைகளை துார் வாரி பராமரிப்பது மட்டுமின்றி, மாற்று வழிகளையும் யோசிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதற்கேற்ப, பெருங்களத்துார் பேரூராட்சியில், காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் முறை, ஆறு மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரவிகுமார், 56, கூறியதாவது:பேரூராட்சிகளின் இயக்குனர் உத்தரவுப்படி, சூரிய சக்தி இயந்திரம் வாயிலாக, காற்றை குடிநீராக மாற்றும் இயந்திரம், பேரூராட்சி அலுவலகத்தின், மாடியில் பொருத்தப்பட்டுள்ளது.இதற்கு, 4.7 லட்சம் ரூபாய் செலவானது. மொத்தம், நான்கு, 'செட்' சூரிய சக்தி இயந்திரங்களில், காற்றை மறுசுழற்சி செய்து, தண்ணீராக மாற்றும் வகையிலான மோட்டார்கள் உள்ளன.இவற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீர் சிறிய அளவுள்ள சுத்திகரிப்பு இயந்திரம் வாயிலாக, சுத்தம் செய்யப்படுகிறது.நாளொன்றுக்கு, 80 லிட்டர் குடிநீர், இந்த இயந்திரம் வாயிலாக பெறப்பட்டு, அருகில் உள்ள, அரசு பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது.


தமிழகத்திலேயே முதல் முறையாக, இத்திட்டம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், குடிநீர் தேவையை பொறுத்து, பேரூராட்சி அலுவலகத்திலேயே திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்.இதை பின்பற்றி, வீடுகளிலும் அமைக்க, எங்களிடம் பொதுமக்கள், ஆலோசனை பெற்று வருகின்றனர். அவர்கள், அரசு மானியத்தையும் எதிர்பார்க்கின்றனர்.அரசு மானியத்துடன், அனுமதியும் அளித்தால், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும், இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர்- -.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,இந்தியா
24-ஜன-202020:55:30 IST Report Abuse
vns தண்ணீரை பாதுகாக்க தெரியாதவர்கள் அதற்காக பணம் செலவழிக்காதவர்கள் இந்த இயந்திரத்தயா பராமரிப்பார்கள். மக்கள் சுயநலவாதிகளாகிவிட்டதால் வந்த வினை இது.
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
24-ஜன-202007:05:23 IST Report Abuse
Nathan காற்றை குட்டி நீராக்க முடியாது. அதில் உள்ள ஈராக் பசையை குளிர் பரப்பின் மூலம் வடித்துக் கொள்ளலாம், பனிக்காலத்தில் தகர பலகையில் ஒட்டி சொட்டும் நீர் போல்.
Rate this:
Share this comment
Cancel
Tamil beggar - madurai,இந்தியா
24-ஜன-202006:50:29 IST Report Abuse
Tamil beggar காற்றில் உள்ள ஈரம் முழுவதும் இவ்வாறு உறிஞ்சப் பட்டால் காலநிலை மிகவும் மோசமாகும். பாலை நிலங்கள் தான் மிஞ்சும்
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
24-ஜன-202020:50:59 IST Report Abuse
Nathanடோன்ட் ஓரி, கடல் உள்ளவரை காற்று ஈரம் வற்றாது. அதிக குளிரால் தான் காற்று உலரும், இமய மலை போல் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X