நகராட்சி அசட்டை பதிலால் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
00:24

விருதுநகர் : விருதுநகரில் வேலுச்சாமி நகர் நுழைவுப்பாலம் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் தவிக்கின்றனர். இன்று, நாளை என நகராட்சி நிர்வாகத்தின் அசட்டை பதிலாலும் அதிருப்தியில் உள்ளனர்.



வரத்து கால்வாய் சீரமைப்பு இல்லாததால் கடந்த 2018 ல் பெய்த மழையால் இதன் நீர் விருதுநகர் பி.ஆர்.சி., டெப்போவை மூழ்கடித்தது. இதன் காரணமாக விருதுநகர் வேலுச்சாமிநகர் நுழைவுப்பாலம் இடிக்கப்பட்டது. அதை பாதி சீரமைத்தும், பாதி சீரமைக்காத நிலையிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திடீரென ஏற்பட்ட ஓட்டையால் அவ்வப்போது விபத்தும் அரங்கேறியது. பாலத்தை சீரமைக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் இன்று நாளை என இழுத்தடித்து வந்தனர். இதனிடையே 2019 ல் பெய்த மழையால் மீண்டும் பி.ஆர்.சி., டெப்போ நிறையவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் பாலத்தை இடித்தனர்.



மழை நீர் தேக்கத்திற்கு காரணமான வரத்து கால்வாய் சீரமைப்பில் அக்கறை கொள்ளாத பொதுப்பணித்துறை பாலம் உடைப்பதில் மட்டும் அதிக வேகம் காட்டுவது வாடிக்கையாக உள்ளது . பாலத்தை உடைத்த வேகத்தை கால்வாய் சீரமைப்பில் செய்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. மக்களிடம் வரி பணம் வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம் ஓராண்டுக்கும் மேலாக பாலத்தை சீரமைக்காது சாக்குபோக்கு கூறி இடித்தடித்து வருவது இப்பகுதி மக்களிடையே மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.



வேலுச்சாமிநகருக்கு கணேஷ்நகர் வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது. கணேஷ்நகர் தெருவும் பாதாளசாக்கடை பணிகளால் மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. ஆண்டுக்கணக்கில் தொடரும் இப்பிரச்னைக்கும் இது நாள் வரை தீர்வு இல்லை . இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி,''டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பாலம் கட்டும் பணி துவங்கும். நகராட்சி பகுதி முழுவதும் விரைவில் ரோடு போடப்பட உள்ளது. அதன் கீழ் கணேஷ்நகரிலும் ரோடு போடப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X