'குடி'மகன்கள் கும்மாளம்; பரிதவிப்பில் பாரதி நகர் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
00:26

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாரதி நகர் பகுதியில் ரோடு முழுவதும் குப்பையை குவிப்பதாலும், அப்பகுதி மழை நீர் ஓடை துார் வாராமல் சுகாதார கேட்டில் இருப்பதாலும், 'குடி'மகன்கள் வேறு இருளை பயன்படுத்தி குடித்து கும்மாளமடிப்பதால் மக்கள் பாதிக்கின்றனர்.



இந்நகரில் செங்கோட்டை முனியப்பன் தெருவில் 1 முதல் 8 தெருக்களும், விக்னேஷ் நகர் உட்பட பகுதிகள் உள்ளன. டெலிபோன் ரோட்டிலிருந்து பாரதி நகருக்கு செல்லும் பிரதான ரோடு உள்ளது. டெலிபோன் ரோட்டில் நகராட்சி மூலம் 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகள் கொட்டப்படுகின்றன. வீடு தோறும் குப்பை வண்டிகள் வந்து குப்பை வாங்கும் என கூறி தொட்டிகளை எடுத்து விட்டனர். குப்பை வண்டிகளும் குப்பை வாங்க வருவதில்லை. இதனால் இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் குப்பை தேங்கி கிடப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். பிரதான ரோட்டில் ஆங்காங்கு குப்பை கொட்டப்பட்டு ரோடு முழுவதும் குப்பையாக உள்ளது. இந்த ரோட்டில்இரவு நேரத்தில் குடிமகன்கள் குடித்து கும்மாளமிடுகின்றனர்.




தெரு விளக்கை உடைத்து இருளாக்கின்றனர். 1 வது தெருவில் ரோடு பெயர்ந்து கற்கள் காலில் குத்துகிறது. இதுபோன்ற நிலை தான் மற்ற தெருக்களிலும் உள்ளது. இங்கு நகராட்சி மூலம் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையம் காட்சி பொருளாக உள்ளது. பாரதிநகரில் உள்ள மழை நீர் வரத்து பிரதான ஓடை துார் வாரப்படாமல் கழிவு நீர் தேங்கி குப்பை கொட்டும் இடமாகவும் உள்ளது. வீடுகளின் கழிவு நீர் நேரடியாக ஓடையில் குழாய்கள் மூலம் விடப்படுகின்றன. இதேபோன்று விக்னேஷ் நகர்உருவாகி ஆண்டுகள் பல ஆகி விட்ட நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்கின்றனர் இப்பகுதியினர்.



எங்கள் பகுதிக்கு வரும் பிரதான ரோடு குப்பை கொட்டப்பட்டு சுகாதார கேடாக உள்ளது. டெலிபோன் ரோட்டில் 2 குப்பை தொட்டிகள் இருந்தபோது குப்பையை அதில் கொட்டினர். நகராட்சி அவற்றை எடுத்த பிறகு குப்பையை ரோட்டில் தான் கொட்டுகின்றனர். இதனால் ரோட்டில் வந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சரவணன், பெட்டி கடைக்காரர் .எங்கள் பகுதியில் உள்ள பல தெருக்களில் ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காலில் குத்துகிறது.



வாகனங்களில் வந்து செல்ல முடியவில்லை. 1வது தெருவில் உள்ள ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய ரோடு அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-இந்திரா, குடும்ப தலைவி.ஒன்றாவது தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் முறையாக அமைக்கவில்லை. சீராக இல்லாததால் பாலத்தில் செல்ல முடியாது வாகனங்கள் தடுமாறி வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. சில நேரங்களில் குடிநீர் குழாய் இணைப்புகளில் மோதி, குழாய்கள் சேதமடைகிறது. பாலத்தை பெயர்த்து புதியதாக கட்டட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வாசுகி, ஓய்வு அரசு அலுவலர் .பாரதி நகர் வழியாக செல்லும் மழை நீர் வரத்து ஓடை பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் முட்புதர்கள் வளர்ந்தும், கழிவு நீர் தேங்கி சுகாதார கேட்டில் உள்ளது.



இடையே ஓடையில் முட்புதர்களை அகற்றிவிட்டு அப்படியே ஓடையிலேயே குவித்து விட்டு சென்று விட்டனர். ஓடையை துார் வாரி மழை நீர் செல்லும் வகையில் நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வனிதா, குடும்ப தலைவி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X