| வீடு புகுந்து திருட முயன்ற சிறுவன் கீழே விழுந்து காயம் Dinamalar
வீடு புகுந்து திருட முயன்ற சிறுவன் கீழே விழுந்து காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
00:26

கடலுார்: வீடு புகுந்து திருட முயன்ற சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கடலுார், வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 72; ஓய்வு பெற்ற அரசுக் கல்லுாரி பேராசிரியர். இவர், இரண்டாவது தளத்தின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். மேல் தளத்தில் அறைக் கதவின் பூட்டு உடைக்கப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து மேல் மாடிக்கு சென்றார். இதனை பார்த்த, மர்ம நபர் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றான். இதில், மர்ம நபருக்கு இரண்டு கால்களின் பாதத்திலும் காயம் ஏற்பட்டது. தகவலறிந்த தேவனாம்பட்டிணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், திருட முயன்ற மர்ம நபர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த போது, போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திருட்டு முயற்சியில் ஈடுபட்டது 16 வயது சிறுவன் எனத் தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X