அ.தி.மு.க., தாராளம்: தி.மு.க., தயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
00:26

அருப்புக்கோட்டை: உள்ளாட்சி நகர தேர்தல் அறிவிப்பு முன்பே நகராட்சி தேர்தலில் போட்டியிடும் பணியில் கட்சிகள் தீவிரம் காட்ட துவங்கி விட்ட நிலையில் போட்டியிடுவோருக்கு அ.தி.மு.க., தாராளமாக செலவு செய்ய உள்ளதால் தி.மு.க., வில் போட்டியிட உள்ளோர் யோசனையில் உள்ளனர்.



அருப்புக்கோட்டை நகராட்சி தொடர்ந்து தி.மு.க., வசமாக இருந்து வந்தது. உள்ளாட்சி ஊரக தேர்தலில் ஊராட்சி ஒன்றியத்தை தி.மு.க.,வே கைப்பற்றி உள்ளது. நகராட்சி தேர்தலிலும் மீண்டும் நகராட்சியை கைப்பற்ற தி.மு.க .,முனைப்பு காட்டி வருகிறது. நகராட்சியை கைப்பற்ற அ.தி.மு.க., வின் மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சி எடுத்து அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.இந் நகராட்சி 36 வார்டுகளில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரை வெற்றி வாய்ப்பு உள்ளவராக பார்த்து தேர்வு செய்கின்றனர்.



தேர்தல் செலவு செய்யவும் கட்சி தாராளம் காட்ட முடிவு செய்துள்ளது.ஆனால் தி.மு.க., வில் அப்படி இல்லை. யார் அதிகம் செலவு செய்கிறார்களோ, கட்சிக்கு நிதி வழங்குகிறார்களோ அவர்களுக்கு தான் சீட் என்ற நிலை உள்ளது. இதனால் ஏற்கனவே ஓய்ந்து போய் உள்ள கட்சியின் நீண்ட கால விசுவாசிகளும் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுத்துள்ளவர்களும் போட்டியிட தயங்குகின்றனர்.



வேட்பாளர் தன் சொந்த செலவில் நிற்க வேண்டும் என்பது கட்சியின் கோட்பாடாக இருப்பதால் கட்சியினர் சீட் கேட்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனிடையே கட்சியின் மாவட்ட செயலர் சாத்துார் ராமச்சந்திரன் இங்கு போட்டியிடுவோரை தேர்வு செய்ய நேர்காணலையும் நடத்தி வருகிறார். கடமைக்கு நேர் காணலில் கலந்து கொள்வதாக கட்சியினர் கூறுகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X