புதுச்சத்திரம்: மேட்டுப்பாளையத்தில் காய்ந்து போன சாலையோர மரத்தை வெட்டி அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள், பைக், கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் மேட்டுப்பாளையம் வளைவில் சாலையோரம் இருந்த ஆலமரம் பட்டுப்போய் காற்றில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது.இதனால் சாலையில் வரும் வாகனங்கள் மீது விழுந்து வாகன ஓட்டிகள் காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி, சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற, நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.