கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் குடியரசு தின கலை நிகழ்ச்சி ஒத்திகை நடந்தது.
குடியரசு தின விழா கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 26ம் தேதி, நடக்கிறது. அன்றைய தினம் தேசியக் கொடியேற்றப்பட்டு, காவலர்களின் அணிவகுப்பு நடக்கிறது. தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி ஒத்திகை நேற்று, நடந்தது. இதில், 7 அரசு, அரசு உதவிப் பெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி ஒத்திகையை சப் கலெக்டர் ஜெகதீஸ்வரன் நேற்று பார்வையிட்டார்.