ஆபத்து பயணம் அவசியமா; பள்ளி சிறார்களை அதிகளவில் ஏற்றும் ஆட்டோக்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
00:28

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் ஆட்டோவில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். பெற்றோர்களே தங்களது குழந்தைகளை ஆட்டோவில் பயணிக்க வைக்கின்றனர்.



மாவட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளம் உள்ளன. ஒரு சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக பஸ், வேன் போன்றவற்றை கட்டணத்தில் இயக்குகின்றனர். இவைகளே சில நேரங்களில் டிரைவரின் அலட்சியத்தால் அவ்வப்போது விபத்தில் சிக்கி பாதுகாப்பான பயணத்தை கேள்விக்குரியாக்குகிறது.



இந்நிலையில் பஸ் வசதி இல்லாத பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பில்லாத மூன்று சக்கர ஆட்டோவில் பயணம் செய்கின்றனர். பயணிகள் ஆட்டோ என்பது அவசர தேவைக்காக மக்கள் பயன்படுத்துவது. இதில் அதிகபட்சமாக 3 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். ஆனால் நகர் பகுதி பள்ளிகளுக்கு இந்த ஆட்டோவில் 10க்கு மேற்பட்ட மாணவர்கள் இட நெருக்கடியில் பயணம் செய்கின்றனர்.



அதிலும் சில ஆட்டோக்களில் சிறு குழந்தைகளை 'அள்ளி' எடுத்து செல்கின்றனர். குறைந்த கட்டணம் என்பதால் பெற்றோரே இதற்கு அனுமதிக்கின்றனர். ஆட்டோவில் மேற்புறம் புத்தகப்பைகளை கட்டி உள்புறம் குழந்தைகளை நெருக்கி அமர வைத்து ஏற்றி செல்கின்றனர். இதில் எந்தவித பாதுகாப்பும் இல்லை. ஆட்டோவில் கதவு இல்லாததால் சிறிது தடுமாறினாலும் குழந்தைகள் வெளியில் விழ வாய்ப்புள்ளது. சில ஆட்டோ டிரைவர்கள் மெதுவாகவும் செல்வதில்லை.



போட்டி போட்டு முந்தி செல்ல நினைத்து விபத்தில் சிக்குவதும் உண்டு. கிராம பகுதி பள்ளிகளுக்கு முறையான பஸ் வசதி இல்லை. இப்பகுதியில் பள்ளி வரும் மாணவர்களும் வேறு வழியின்றி ஆட்டோவில் பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆட்டோவின் பின்னால் கால்களை தொங்க விட்டும், தொங்கி கொண்டும் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.



பெற்றோரும் குறைந்த கட்டணத்திற்கு ஆசைப்பட்டு ஆட்டோவில் குழந்தைகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.பஸ் இல்லை என்பதற்காக இப்படியாஅரசு மற்றும் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு அதிக மாணவர்கள் ஒரே ஆட்டோவில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். பஸ் வசதி இல்லை என்பதற்காக இப்படி ஆபத்தான பயணம் செல்லக்கூடாது.



ஆட்டோ என்பது தவிர்க்க முடியாத முக்கியமான போக்குவரத்து வாகனம். நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் ஆட்டோவில் ஆட்களை ஏற்றி செல்ல வேண்டும். பெற்றோரும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.-- முருகன், சமூக ஆர்வலர், சிவகாசி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X