மூணாறில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒருநாள் அவகாசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
00:55

மூணாறு : மூணாறில் ரோடு, வழியோரங்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றை அதிகாரிகள் பலமுறை அகற்றியும் பூற்றீசல்கள் போன்று மீண்டும் முளைத்து விடுகின்றன.



தற்போது வழியோர ஆக்கிரமிப்புகளின் மீது ஊராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.நகரில் நேற்று ஊராட்சி செயலர் அஜீத்குமார் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



ஒரு சில பகுதிகளில் வழியோர ஆக்கிரமிப்புகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து எச்சரித்தனர்.அதேபோல் காய்கறி மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது, மார்க்கெட் சங்கத்தினர் ஒரு நாள் கால அவகாசம் கேட்டதுடன், ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்றிக் கொள்ள முன் வந்தனர். அதற்கு அனுமதியளிக்கப்பட்டது.



மார்க்கெட் சங்க பொருளாளர் பாலசிங் கூறுகையில், '' இன்று (நேற்று) சந்தை நாள் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள ஒரு நாள் கால அவகாசம் கோரப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு அவை மீண்டும் முளைக்காமல் தடுக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X