கட்டாய கல்வி உரிமை சட்ட சேர்க்கை பள்ளிகளில் ஆய்வுக்கு குழுக்கள் நியமனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
00:57

தேனி: நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர்ந்த மாணவர்கள் குறித்து ஆய்வு செய்ய 11 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.



தனியார், அரசு உதவி பெறும் மெட்ரிக், நர்சரி, பிரைமரி பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும்.கல்வித்துறை நிர்ணயித்த கட்டணத்தை அரசு பள்ளிகளுக்கு வழங்குகிறது. இத்திட்டம் குறித்து ஆய்வுக்கான ஆலோசனை கூட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி தலைமை வகித்தார்.துணை ஆய்வாளர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) வளர்மதி , வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளிகளை ஆய்வு செய்ய 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



ஒவ்வொரு குழுவிலும் பி.இ.ஓ., தலைமையாசிரியர் ,வளமைய கருத்தாளர்கள், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் என 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.இக் குழுவினர் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கை விதிப்படி நடைபெற்றுள்ளதா, மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டதா என மாணவர், பெற்றோர், பாதுகாவலர்களிடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆய்வு 24, 25 மற்றும் 27 ல் நடக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் 9 கோப்புகள் தயார் செய்து கல்வித்துறைக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X