மணிமுக்தா அணை பாசன நீரை நம்பிய விவசாயிகள்... ஏமாற்றம்! க டைமடைக்கு தண்ணீர் செல்லாததால் விவசாயம் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:01

தியாகதுருகம்: மணிமுக்தா அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் கடைமடைக்கு செல்லாமல் வழியிலேயே விரயமாவதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.



கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே சூளாங்குறிச்சி அருகே அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 36 அடி ஆகும். அணை நிரம்பும் போது 736 மில்லியன் கன அடி தண்ணீரை இதில் தேக்கி வைக்க முடியும்.இதன் மூலம் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5,493 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் இருந்து 13 கி.மீ., துாரத்திற்கு பாசன நீர் எடுத்துச் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பாசன கால்வாய் கட்டமைப்பு பல இடங்களில் சேதமடைந்துள்ளது.பல மதகுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. பல ஆண்டுகளாக பாசன கால்வாய் பராமரிப்பின்றி முட்செடிகள் அடர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் பிரதான கால்வாயின் சில மீட்டர் நீளத்திற்கு மட்டும் ஒப்புக்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.பிரதான கால்வாயின் பெரும்பகுதி மற்றும் கிளை வாய்க்கால்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.



இதனால் பாசன நீர் கடைமடைக்குச் சென்றடைவது கேள்விக்குறியானது.அணை நிரம்பும் காலங்களில் கூடுதலாக தண்ணீரை வெளியேற்றும் வகையில் 71.16 கோடி ரூபாய் மதிப்பில் கரைகளை பலப்படுத்தி புதிய ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனோடு சேர்த்து கடைமடை வரை பிரதான கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால்களை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.



இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணை முற்றிலும் வறண்டு கிடந்தது. இதனால் ஆயக்கட்டு பாசன நிலங்களில் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் போனது.இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை ஓரளவு பெய்ததால் அணைக்கு 30 அடி தண்ணீர் வரத்து கிடைத்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி கலெக்டர் கிரண் குரலா அணை நீரை பாசனத்திற்கு திறந்து விட்டார்.ஆனால், பாசன நீர் கடைமடைக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது.



பல இடங்களில் பாசன நீரை அந்தந்த பகுதி ஏரிகளை நிரப்புவதற்கு திருப்பி விட்டுள்ளனர். இதனால் பிரதான கால்வாயில் செல்லும் தண்ணீரின் வேகம் குறைந்து போனது. பல இடங்களில் கால்வாய் கரைகள் சேதமடைந்து தண்ணீர் விரயமாகி வருகிறது.அதேபோல் செப்பனிடப்படாத கால்வாயில் வளர்ந்துள்ள முட்செடிகளால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.அணையின் பாசன நீரை எதிர்பார்த்து பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மணிமுக்தா அணையின் பாசன நீர் கடைமடைக்கு முழுமையாக சென்றடைய பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X