பொதுநல வழக்கு தொடர திண்டிவனம் வழக்கறிஞர்கள் முடிவு! ...கோர்ட்டுக்குச் செல்ல, சர்வீ்ஸ் ரோடு அமைக்கப்படுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:04

திண்டிவனம்: திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சர்வீஸ் ரோடு அமைக்கப்படாமல் உள்ளதால், வழக்கறிஞர்கள் சார்பில் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.



திண்டிவனம் நேரு வீதியில், செயல்பட்டு வந்த நீதிமன்றங்கள், குறுகிய இடத்தில் இருந்ததால், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என அனைவரும் சிரமப்பட்டனர். நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.இதைக் கருத்தில் கொண்டு, திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் உள்ள ஜக்காம்பேட்டையில், 19 கோடி ரூபாய் செலவில், புதியதாக கட்டப்பட்டுள்ள திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்பட்டது. இதில், ஐகோர்ட் தலைமை நீதிபதி, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.திறப்பு விழாவின் போதே, வழக்கறிஞர்கள் சார்பில், 'தேசிய நெடுஞ்சாலை அருகே திறக்கப்பட்டுள்ள நீதிமன்றத்திற்கு வாகனங்களில் வருபவர்கள் தென்பசார் வரை சென்று திரும்பி வரவேண்டியுள்ளதால், திண்டிவனம் அருகே சிங்கனுார் வரை உள்ள சர்வீஸ் ரோட்டை, புதிய நீதிமன்றம் வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.



கோர்ட்டுக்கு சர்வீஸ் ரோடு இல்லாததால் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரும், போக்குவரத்து விதிகளை மீறி எதிர் புறமாக (விழுப்புரம் மார்க்கம்) வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.சர்வீஸ் ரோட்டை உடனடியாக நீட்டித்து தர வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதற்கடுத்து, வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்று, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கு கோரிக்கை வைத்தும், சர்வீஸ் ரோடு இதுவரை போடப்படவில்லை.



இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரும்பை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு மற்றும் ஆலங்குப்பத்தைச் சேர்ந்த் காத்தவராயன் ஆகியோர் வழக்கு தொடர்பாக, திண்டிவனம் கோர்ட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சிங்கனுார் சர்வீஸ் ரோடு அருகே கார் மோதியது. இதில், திருநாவுக்கரசு சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் வந்தவர் சென்னை, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.கோர்ட்டுக்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம், வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இதைத்தொடர்ந்து, திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு அண்ட் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம் தலைமையில் பார் அசோசியேஷன், அட்வகேட்ஸ் அசோசியேஷன் மற்றும் வழக்கறிஞர் நலச்சங்க கூட்டு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு திண்டிவனத்தில் இருந்து சர்வீஸ் ரோடு அமைக்கக்கோரி, அமைச்சர் சண்முகத்தை சந்தித்து கோரிக்கை விடுப்பது. தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் சம்பந்தபட்ட துறைகள் பேரில் வழக்கறிஞர்கள் சார்பில் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.



வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு, சிங்கனுார் வரை உள்ள சர்வீஸ் ரோட்டை, கோர்ட் வரை நீட்டித்து தருவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X