18 வயசுக்கு பின்...! கோவையில் ஆதரவற்ற குழந்தைகளைபாதுகாக்க பிற்காப்பு மையம் இல்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஜன
2020
02:14
பதிவு செய்த நாள்
ஜன 24,2020 01:24

கோவை:ஆதரவற்றோர் காப்பகங்களிலுள்ள பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு, சமூகத்துடன் பிணைப்பு ஏற்படுத்தும் வகையில், கோவையில் பிற்காப்பு மையம் அமைக்க வேண்டும்.தமிழகத்தில், பெற்றோரில்லாத 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பள்ளி கல்வி நிறைவு செய்யும் வரை, அரசு நடத்தும் காப்பகங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.


18 வயதுக்கு பின், உறவினர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.உறவினர் இருப்பவர்களின் நிலை இப்படி. உறவினர்கள் எவரும் இல்லாதவர்கள், மேற்படிப்பை படிக்க விரும்பினால், பிற்காப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள்.பிற்காப்பு மையம் எப்படி?இங்கு, மேற்படிப்பை முடித்த 21 வயது எட்டியவர்கள், வேலைவாய்ப்பு பெற்று வெளியேறலாம். காப்பகங்களை போன்றில்லாமல், குடியிருப்பு பகுதியில், வீடு போன்ற அமைப்பில் பிற்காப்பு மையம் இருக்க வேண்டும். இது, காப்பக சூழலில் வளர்ந்தவர்கள், சுயமாக வாழ துவங்கும் போது, சமூகத்துடன் நல்ல உறவை மேம்படுத்த, நல்ல வாய்ப்பாக இருக்கும்.கோவையில் இல்லைதமிழகத்தில் வேலுார், செங்கல்பட்டு, மதுரை ஆகிய இடங்களில் மட்டுமே அரசு பிற்காப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன.


கோவை உட்பட மற்ற மாவட்டங்களில், தனியார் காப்பகங்களில்தான், 21 வயது வரை பாதுகாப்பு தேவைப்படுபவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் கீழ், இரண்டு அரசு காப்பகம் உட்பட, 56 தொண்டு நிறுவனங்களின், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள் செயல்படுகின்றன.ஆண்டுதோறும் 10க்கும் மேற்பட்டோர், பிற்காப்பு மையத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.


ஆனால் சாதாரண காப்பகங்களிலேயே அவர்கள், 21 வயது வரை தங்க வைக்கப்பட்டு, கல்வியை நிறைவு செய்கின்றனர்.இதனால், மையத்தை விட்டு வெளியேறும் போது, இவர்களுக்கு சமூகத்துடன் நல்ல உறவு கிடைப்பதில்லை. தனிமையில் தவிக்கும் இவர்கள், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.கோவையில் பிற்காப்பு மையம் அமைத்தால் திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கும், மிகவும் உதவியாக இருக்கும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.


செவிமடுக்குமா அரசு?'குடும்ப சூழலே நோக்கம்'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் கூறுகையில், ''பிற்காப்பு மையம் இல்லாததால், காப்பகத்திலேயே தகுதியுள்ள இளைஞர்கள், இளம் பெண்களை தங்க வைக்கிறோம். 2015 -16ல் 18 பேரும், 2016 - 17ல், 8 பேரும், 2017 ---18ல் 9 பேரும் பிற்காப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ், காப்பகங்களில் பராமரிக்கப்பட்டுள்ளனர்.


காப்பகங்களே இல்லாமல், அனைத்து ஆதரவற்ற குழந்தைகளையும், தத்தெடுப்பு திட்டம் மூலம் குடும்ப சூழலுக்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். அதேவேளையில், பிற்காப்பு மையத்தின் அவசியத்தையும், உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X