உடை மாற்றும் அறையில் மர்ம நபர்! கைது செய்யக்கோரி போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:35

உடுமலை:உடுமலை அரசு மருத்துவமனையில், செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் பதுங்கியிருந்த மர்ம நபரை கைது செய்யவும், உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடுமலை அரசு மருத்துவமனையில், தினமும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். 600க்கும் மேற்பட்டோர், உள் நோயாளியாக தங்கி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.அரசு மருத்துவமனையில், சுகாதார கேடு, பாதுகாப்பு வசதிகள் போதிய அளவு இல்லை. இந்நிலையில், பணிக்கு வரும் செவிலியர்கள், உடை மாற்றும் அறைக்குள் மர்ம நபர் இருந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், இரவு, வழக்கம் போல் செவிலியர்கள் பணிக்கு வந்து, ஒவ்வொருவராக உடை மாற்றிக்கொண்டிருந்துள்ளனர்.அப்போது, உள்ளே மர்ம நபர் இருந்துள்ளது தெரிந்ததும், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சிறிது நேரத்தில் அந்நபரும், படிகள் வழியாக இறங்கி, தப்பி ஓடியுள்ளார். இதனால், அதிருப்தியடைந்த செவிலியர்கள் நேற்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், ஒரு பகுதியினர் நோயாளிகள் சிகிச்சை பாதிக்காதவாறு, பணியில் ஈடுபட்டனர்.செவிலியர்கள் கூறுகையில்,' உடை மாற்றும் அறையில், மர்ம நபர் பதுங்கியிருந்தார்; பல முறை இது போல் நடந்துள்ளது. கேட்டில் இருந்த செக்யூரிட்டியும், அவரை பிடிக்கவில்லை. உள்ளே இருந்த நபர் வீடியோ எடுத்திருக்கலாம் என்ற, சந்தேகமும் உள்ளது. இது போல், பல முறை நடந்துள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், மர்ம நபரை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.அங்கு வந்த போலீசார் மற்றும் டாக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X