மொபைல் கடையில் திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:37

கொடுங்கையூர்: புளியந்தோப்பைச் சேர்ந்தவர் தாகீர், 28. இவர், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில், மொபைல் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, கடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 20 மொபைல் போன்கள் திருடு போனது தெரிய வந்தது. கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


மதுபானம் விற்ற பெண் சிக்கினார்


கொத்தவால்சாவடி: கொத்தவால்சாவடி, ஆதியப்பா தெரு நடைபாதையில், கள்ள சந்தையில் மதுபானம் விற்பதாக, கொத்தவால்சாவடி போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த கீதா, 29, என்பவர் மது விற்றது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


வழிப்பறியில் ஈடுபட்டோருக்கு, 'கம்பி!


'கொடுங்கையூர்: கொடுங்கையூர், எழில் நகரை சேர்ந்தவர் அய்யப்பன், 25. இவர் நேற்று, டூ - வீலரில், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினார். அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி, இரண்டு மொபைல், 2,000 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த மோசஸ், 20, புளியந்தோப்பு, திரு.வி.க.நகரைச் சேர்ந்த பாலாஜி, 20, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார்,

மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தரமணி: தரமணியைச் சேர்ந்தவர் வசந்தி, 50. நேற்று முன்தினம், டூ - வீலரில் சென்று கொண்டிருந்தார். தரமணி, பிள்ளையார் கோவில் தெருவில், பின்தொடர்ந்து, மற்றொரு வாகனத்தில் வந்த இருவர், வசந்தி கைப் பையில் வைத்திருந்த, 2,500 ரூபாய், ஒரு மொபைல் போனை பறித்து தப்பினர். தரமணி போலீசார் விசாரணையில், அடையாறு, கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த சரவணன், 20, என தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கஞ்சா விற்றவர் அகப்பட்டனர்


வியாசர்பாடி: வியாசர்பாடி, மார்க்கெட் பகுதியில், வியாசர்பாடி போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை சோதனை செய்த போது, 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், வியாசர்பாடியைச் சேர்ந்த சுபாஷ், 27, என்பது தெரியவந்தது.


சிட்லபாக்கம்: குரோம்பேட்டை, ராதா நகர் அருகே உள்ள, தனியார் கல்லுாரி எதிரில், மர்ம நபர்கள் சிலர், நேற்று முன்தினம் இரவு, கஞ்சா விற்பனை செய்வதாக, சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், குரோம்பேட்டை, நாகல்கேணியைச் சேர்ந்த, அர்ஷத் ஆலம், 19, முகமது ஹூசைன், 26, மற்றும் பம்மலைச் சேர்ந்த, ஷாஜித், 19, ஆகியோரை கைது செய்தனர்; 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


ஜே.சி.பி., திருடியோர் பிடிபட்டனர்


அம்பத்துார்: அம்பத்துார், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 28. இவர் தன், ஜே.சி.பி., இயந்திரத்தை, 20ம் தேதி இரவு, அங்குள்ள பெட்ரோல், 'பங்க்' அருகில் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்த போது, அந்த வாகனம் திருடு போயிருந்தது; அதன் மதிப்பு, 14.50 லட்சம் ரூபாய். அம்பத்துார் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில், அந்த வாகனத்தை திருடி, செங்குன்றத்தில் விற்க முயன்ற, பாடிநல்லுாரை சேர்ந்த கார்த்திக், 30, திருத்தணி ராமராஜ், 26, ஆந்திர மாநிலம், சித்துாரைச் சேர்ந்த கேசவன், 28, ஆகியோர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.


டிரைவரை தாக்கிய திருநங்கை கைது


புதுவண்ணாரப்பேட்டை: ராயபுரம், சி.ஜி.,காலனியைச் சேர்ந்தவர் ராமதுரை, 40; லாரி டிரைவர். இவர், காசிமேடு, சூரியநாராயண சாலையில், நேற்று லாரியை நிறுத்தி, உணவு அருந்தினார். அப்போது, அங்கு வந்த திருநங்கை ஒருவர், ராமதுரையின் செயினை பறிக்க முயன்றதோடு, ராமதுரையை கல்லால் தலையில் தாக்கி தப்பினார். இதில் காயமடைந்த ராமதுரையை, அக்கம்பக்கத்தினர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பை சேர்ந்த திருநங்கை ரியானா, 23, என்பவரை கைது செய்தனர்.


கூலித்தொழிலாளிக்கு, 'போக்சோ'


புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி.நகர், சேனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன், 45; லேத் பட்டறை தொழிலாளி. இவர், தன் பக்கத்து வீட்டில் வசிக்கும், 13 வயது சிறுமிக்கு, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை நையப்புடைத்து, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், படுகாயமடைந்த மகேந்திரனை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பூட்டை உடைத்து 15 சவரன், 'அபேஸ்'


பழவந்தாங்கல்: நங்கநல்லுார், கண்ணையா தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன், 35. இவர், சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில், அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி, 16ம் தேதி குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஞானசேகரனும் அலுவலக பணியாக வெளியூர் சென்று, நேற்று காலை திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு மற்றும் பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, 15 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது. பழவந்தாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X