| விபத்தில் பலியானவரின் கண்கள் தானம் Dinamalar
விபத்தில் பலியானவரின் கண்கள் தானம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:38

கோயம்பேடு:அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி பலியான கல்லுாரி மாணவனின் கண்கள் தானம் செய்யப்பட்டன.


வேலுார் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன், 43. இவரது மகன் சரவணன், 18. இவர், காட்பாடியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு, 16ம் தேதி சென்றார். பின், 17ம் தேதி இரவு, பெட்ரோல் வாங்க, டூ - வீலரில் கோயம்பேடு சென்றார்.அவரது உறவினர் தர்சன்குமார், 14, என்பவரும், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றார். கோயம்பேடு, காளியம்மன் கோவில் சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற அரசு பேருந்து, மார்க்கெட் - ஏ சாலையில் திரும்பியது.இதில், எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம், அரசு பேருந்தின் பின் பகுதியில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயமடைந்தார்.இதையடுத்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தர்சன் குமார், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.இந்நிலையில், சரவணன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விபத்து குறித்து, கோயம்பேடு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.சரவணன் விபத்தில் சிக்கிய நாளன்று அவரது, 18வது பிறந்த நாள் என்பதும், அவரது கண்கள், அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X