ரூ.19 லட்சம் ஏல தொகை நிலுவை வாகன 'பார்க்கிங்' தளத்திற்கு 'சீல்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:47

குன்னுார்:குன்னுார் நகராட்சி 'பார்க்கிங்' தளம் ஏலத்தொகை நிலுவை காரணமாக,'சீல்' வைக்கப்பட்டது.குன்னுார் நகரில் போதிய பார்க்கிங் வசதி இல்லாத நிலையில், மவுண்ட் ரோடு மற்றும் பஸ் நிலையத்தில், வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, வி.பி., தெரு ஓடையின் மேல், 2006-07ம் நிதியாண்டில், 42 லட்சம் ரூபாய் செலவில், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.பணி நிறைவடைந்த நிலையில், 2014 ஜூன், 27ல் பார்க்கிங் தளம், நகராட்சி நிர்வாகத்தால் திறக்கப்பட்டது. வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில், ஏலம் விடப்பட்டது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிவஞானம் என்பவர், ஏலம் எடுத்திருந்தார்.அதன்படி, 2017ல், ஏல தொகையாக ஒரு ஆண்டிற்கு, 10.10 லட்சம் ரூபாய்; 2018ல், 10 லட்சத்து, 60 ஆயிரத்து, 500 ரூபாய்; 2019ல், 11 லட்சத்து, 13 ஆயிரத்து, 525 ரூபாய் ஏலம் எடுக்கப்பட்டது.மேலும், 'தொழில் வரி மூன்றாண்டுகளுக்கு, 7,350 ரூபாய், சேவை வரி, 5 லட்சத்து, 27 ஆயிரத்து, 675 ரூபாய்,' என, மொத்தம், 37 லட்சத்து, 19 ஆயிரத்து, 50 ரூபாய் தொகை நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய நிலையில்,19 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு பாக்கி தொகை இருந்தது.இந்த நிலுவை தொகை கட்டுவதற்கான காலகெடு, நேற்று முன்தினம் முடிவுற்ற நிலையில், தொகை கட்டுப்படவில்லை. இதனால், நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் 'பார்க்கிங்' தளத்தை பூட்டி 'சீல்' வைத்தனர்.இதனால், தனியார் வாகன டிரைவர்கள் 'பார்க்கிங்' செய்ய முடியாமல் சாலையோரங்களில், வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.டிரைவர்கள் கூறுகையில்,' நகராட்சியின் இந்த முடிவு நிர்வாகம் சம்பந்தப்பட்டது. இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல், நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை, நகராட்சி நிர்வாகம் ஒரு ஊழியரை நியமித்து, 'பார்க்கிங்' தளத்தை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X