தொழிற்சாலையானது விளை நிலம்: இன்ஜி., பட்டதாரி சகோதர்கள் அமர்க்களம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
01:53

பொள்ளாச்சி,:பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் பட்டதாரிகளான சகோதரர்கள், குத்தகை நிலத்தில் வெற்றிகரமாக வாழை, பப்பாளி சாகுபடி செய்து, இளைய தலைமுறை விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், எம்.இ., பட்டதாரி. அவரது தம்பி அருண்குமார், பி.இ., பட்டதாரி. தினேஷ்குமார் தனியார் பொறியியல் கல்லுாரியில் விரிவுரையாளராகவும், அருண்குமார் கார் நிறுவனத்தில் இன்ஜினியராகவும் பணியாற்றி வந்தனர்.இருவரும், பரம்பரை தொழிலான விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தின், 18 ஏக்கர் விவசாய நிலத்தை தந்தை நிர்வகித்து வந்தார். தென்னை, கொய்யா பயிரிட்டு, நல்ல மகசூல் எடுத்து வந்தார்.அதனால், சின்னாம்பாளையம், கள்ளிப்பாளையம் பகுதிகளில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தனர். அதில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் நேத்திரன் வாழை சாகுபடி செய்தனர்.முதல் சாகுபடியில் கிடைத்த அனுபவத்துடன், வல்லுனர்களின் ஆலோசனை பெற்று, வாழை சாகுபடி பரப்பை படிப்படியாக விரிவுபடுத்தி உள்ளனர்.ஒரு கட்டத்தில், பப்பாளிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டு, பப்பாளி சாகுபடியிலும் ஈடுபட்டனர்.தற்போது, 12 ஏக்கரில் நேந்திரன் வாழை; மூன்று ஏக்கரில் ரெட் லேடி பப்பாளி பயிரிட்டுள்ளனர்.சகோதர்கள் கூறியதில் இருந்து...மன நிம்மதியான தொழில் வேண்டும் என விவசாயத்தை தேர்ந்தெடுத்தோம். குத்தகை நிலத்தில் விவசாயம் துவங்கிய போது, பல்வேறு விமர்சனங்கள் வந்தன.தற்போது, ஒரு தொழிற்சாலை போன்று விவசாயம் செய்கிறோம். டிராக்டர், பவர் டில்லர், ஸ்பிரேயர் ரகங்கள் என வேளாண் இயந்திரங்கள் அனைத்தும் சொந்தமாக வாங்கி விட்டோம்.திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை உற்பத்தி பண்ணைகளில் இருந்து நேரடியாக வாங்கி வந்து பயிரிடுகிறோம். வேளாண் துறையில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் வழிகாட்டுதலுடன் பராமரிப்பு செய்கிறோம்.நேந்திரன் வற்றல் மற்றும் சத்து மாவுக்கு அண்டை மாநிலமான கேரளாவிலும், உலகம் முழுக்கவும் சந்தை தேவை உள்ளதால், நேந்திரன் வாழைக்கு நல்ல கிராக்கி உள்ளது.நடவில் இருந்து அறுவடை வரை, ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு, 18 டன் விளைச்சல்; ஒரு டன், 25,000 ரூபாய் விலை சராசரியாக கிடைக்கிறது. ஒரு முறை அறுவடை முடிந்த பின், பக்கக்கன்று விடும் போது, செலவு பாதியாக குறைகிறது; 75 சதவீத விளைச்சல் கிடைக்கிறது.ஒரு ஆண்டு பயிர் என்பதால், ஏக்கருக்கு ஆண்டுக்கு, 3 - 3.5 லட்சம் ரூபாய் நிகர லாபம் ஈட்ட முடிகிறது.பப்பாளியும் சிறப்புசந்தையில் அதிக வரவேற்புள்ள ரெட் லேடி ரக பப்பாளி சாகுபடி செய்துள்ளோம். 6 - 8 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்யலாம்.இரண்டு ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம். இரண்டு ஆண்டுகளில் ஏக்கருக்கு, 80 டன் விளைச்சல் கிடைக்கிறது. கிலோ, 8 - 15 ரூபாய் விலை கிடைக்கிறது. பப்பாளியின் மருத்துவ குணத்துக்காக விற்பனை அதிகரித்து வருகிறது. என, அனுபவத்தை பகிர்ந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202012:06:03 IST Report Abuse
ருத்ரா கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்தவர்கள் வரிசையில் இருப்பது மகிழ்ச்சி. பூமித்தாய் மனம் குளிர்வாள். வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X