கையெழுத்தை 'ஆட்டோகிராப்' ஆக மாற்ற உழைத்தனர்; ஜெயித்தனர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஜன
2020
15:19
பதிவு செய்த நாள்
ஜன 24,2020 02:23

திருப்பூர்: தங்கள் கையெழுத்தை, ஆட்டோகிராப்பாக மாற்றிக்காட்டிய, தமிழகத்தை சேர்ந்த சிறந்த பத்து தொழில்முனைவோர், திருப்பூரில் நேற்று ஓரிடத்தில் சங்கமித்து, தங்கள் வெற்றி குறித்து மனம் திறந்தனர்.




இந்திய தொழில் கூட்டமைப்பின் 'யங் இந்தியன்ஸ்' பிரிவு சார்பில், இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம், திருப்பூர், திருமுருகன்பூண்டி பப்பீஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. திருப்பூர் 'யங் இந்தியன்ஸ்' பிரிவு தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார்; துணை தலைவர் சேத்தன் காந்தி முன்னிலை வகித்தார். யங் இந்தியன்ஸ் திருப்பூர் பிரிவின் 'மொபைல் ஆப்' அறிமுகப்படுத்தப்பட்டது.


பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த தொழில்முனைவோர் பத்து பேர் பங்கேற்று, சோதனைகளை கடந்து, தாங்கள் சிகரம் தொட்ட அனுபவத்தை பகிர்ந்தனர்.

அவர்களிடம், ஒரு தொழில்முனைவோருக்கு உண்மையான வெற்றி ஏது; லாபம் எது; தோல்வியை எப்படி எதிர்கொள்ளவேண்டும் ஆகிய கேள்விகள் எழுப்பப்பட்டன.


கோவை ரூட்ஸ் குழும தலைவர் ராமசாமி:ஒரு நிறுவனத்துக்கு லாபம் மிக முக்கியம். அதேநேரம், பணம் ஈட்டுவதை மட்டும் லாபம், வளச்சியாக கருதமுடியாது. தொழிலில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். ஈட்டும் லாபத்தில் ஒருபகுதியை நம்மைச் சார்ந்த சமூக மேம்பாட்டுக்காக செலவிட வேண்டும்.


எல்லா துறையிலும் ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. தோல்வியை கண்டு பயப்படக் கூடாது; துணிந்து நிற்கவேண்டும். மனம் தளராது கடினமாக உழைத்தால், வெற்றி கைகூடும். தொழிலில் கால்பதித்த உடனேயே லாபம் ஈட்ட வேண்டும் என நினைப்பது, தொழில்முனைவோரை வீழ்ச்சியில் தள்ளிவிடும்; பொறுமை காக்க வேண்டும். புதுமைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.


புதிதாக தொழில்துவங்குவோர், ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அரசு, இடையூறுகளை கண்டறிந்து களைவதன்மூலம், தொழில் துறை வளர்ச்சி பெறும்.

திண்டுக்கல் நாகா உணவு பொருள் தயாரிப்பு நிறுவன தலைவர் கமலக்கண்ணன்:

கடின உழை ப்பு, பக்தி, சகிப்புத்தன்மை, பொறுமை இவை அனைத்தும் ஒரு தொழில்முனைவோருக்கு இன்றியமையாதது.


இன்றைக்கு லாபம் ஈட்டுவது மட்டும் வெற்றியாகாது; கால்பதித்த தொழிலில் காலம் காலமாக தொடர்ந்து நிலைத்திருப்பதுதான் ஒரு நிறுவனத்துக்கு, தொழில்முனைவோருக்கு மிகப்பெரிய வெற்றி.கோவை ஏ.வி., குழும தலைவர் வரதராஜன்:

நிறுவனங்கள், நுகர்வோரின் எதிர்பார்ப்பு அறிந்து பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். தயாரிப்பு பொருளின் தரம் மிக முக்கியம். ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது, தனி நபரால் கிடைக்கப்பெறுவது இல்லை; தொழில்முனைவோர், தொழிலாளர்களின் கூட்டு முயற்சியே வெற்றியை ஈட்டித்தரும்.


எல்லோரும் தொழில்முனைவோர் ஆவதில்லை; தொழில்முனைவோராவதற்கென்று எந்த பயிற்சியும் இல்லை. மனதிலிருந்து சுயமாக, தொழில்முனைவோராக வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கவேண்டும். அத்தகையோரே, தொழில்முனைவோராக மிளிர்கின்றனர்.

ஈரோடு சி.டி., குழும தலைவர் வெங்கடேஸ்வரன்:


தொழில்முனைவோருக்கு, நிறுவன வளர்ச்சி, நிதி, சமூக பார்வை, ஆன்மிக சிந்தனை, குடும்பம் மீதான அக்கறை இவையெல்லாம் சம அளவில் இருக்கவேண்டும். வெற்றி மட்டுமல்ல... தோல்வியும் கூட, தொழில்முனைவோருக்கு ஒருவகை ஆதாயம்தான்; எதைச்செய்தால் தோல்வி வரும் என தெரிந்துகொள்ளமுடிகிறது. ஒரேவகை பொருட்களை உற்பத்தி செய்யும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. மாறுபட்ட தயாரிப்பு; தனித்தன்மைகள், வெற்றியை பெற்றுத்தருகிறது.இவ்வாறு, தொழில்முனைவோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.


திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் வேலுசாமி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொருளாளர் கந்தசாமி, இந்திய தொழில் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் வெங்கடேஷ் உட்பட பலர்பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X