போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
02:59

பெண் ஊழியர் மீது தாக்கு



மதுரை: எச்.எம்.எஸ்.காலனி ஜேம்ஸ் மனைவி லீமா மகாதேவி 45. இவர் ஜோஸ்மெட் சொல்யூஷன் எனும் ஏலச் சீட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். முதிர்வடைந்த ஏல சீட்டிற்கான தொகையை வாடிக்கையாளர் பலருக்கு தராமல் இழுத்தடித்தார். நேற்று முன்தினம் நிறுவனத்திற்கு சென்ற வாடிக்கையாளர்கள் லீமாவை தாக்கினர். கார் மீது கற்களை வீசினர். லீமா புகார்படி மணிகண்டன், மனைவி செல்வி, முருகன், ஜோதிமணி, மகாலட்சுமி, இந்திராணி, ஹசன்பானு, ரெகானாபானு, நாசர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிகண்டனை தவிர மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.



மோசடி : தம்பதி மீது வழக்கு



மதுரை: பாலம் ஸ்டேஷன் ரோடு எஸ் வங்கி ஊழியர்வினோத்குமார். ஞானஒளிவுபுரம் மெய்யப்பன் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், மனைவி இந்திரா ஆகியோர் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் கம்பெனியில் வீட்டு பத்திரத்தை கொடுத்து கடன் கேட்டுள்ளதாக கூறினர். ஆனால், எஸ் வங்கியில் கடன் வாங்கவே விருப்பம் என கூறி வினோத்குமாரிடம் ரூ.17 லட்சம் 40 ஆயிரத்து 558 பெற்றனர். வீட்டு பத்திரத்தை கொடுக்காமல் தம்பதி மோசடி செய்தனர். செல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



பெண்ணிடம் நகை பறிப்பு



மதுரை: பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு பொன்ராஜ்மனைவி மல்லிகா 58. நேற்று முன் தினம் வீடு அருகே சென்றபோது பின் தொடர்ந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த எட்டு பவுன் செயினை பறித்து தப்பினார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.



லாரியில் பேட்டரி திருட்டு



வாடிப்பட்டி: வாடிப்பட்டி பாலச்சந்திரன் 66, தனக்கு சொந்தமான இரண்டு லாரியை நீதிமன்றம் அருகே மெயின் ரோட்டில் நிறுத்தியிருந்தார். ஜன.,18 இரவு மர்மநபர் ஒருவர் லாரிகளில் இருந்த 4 பேட்டரிகளை திருடி சென்றார். சி.சி. டிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.



விபத்தில் விவசாயி பலி



வாடிப்பட்டி: கட்டகுளம் விவசாயி சண்முகம் 65, நேற்று முன்தினம் இரவு நான்கு வழிச்சாலையில் நடந்து சென்றார். மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற லாரி மோதி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.



மாயமானவர் தலை எரிந்த நிலையில் மீட்பு



திருமங்கலம்: டி.புதுப்பட்டி முருகன் மகன் வெங்கடேஷ் 21. பந்தல் போடும் வேலை செய்தார். ஜன., 11 கோயிலுக்கு பந்தல் போட முனியாண்டி என்பவருடன் சென்றவர் வீடு திரும்பவில்லை. வெங்கடேஷ் தாயார் தனம் புகாரின்படி தாலுகா போலீசார் தேடினர். டி.புதுப்பட்டி முத்துப்பாண்டி, ரமேஷ் உட்பட 4 பேரை விசாரித்தனர். இந்நிலையில் டி.குன்னத்துார் செல்லும் வழியில் ரோட்டோரத்தில்சாக்கு மூட்டையில் வைத்து எரிந்த நிலையில் வெங்கடேஷின் தலை மட்டும் கிடந்தது. அவரது உடல் மற்றும் கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.



டி.எஸ்.பி.,யிடம் ஆர்.டி.ஒ., விசாரணை



திருமங்கலம்: கள்ளிக்குடி கார்த்திகைச்செல்வனை 2012ல் நில மோசடி தொடர்பாக போலீசார் கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷனில் தன்னை துன்புறுத்தியதாக போலீசார் மீது உயர்நீதிமன்றத்தில் கார்த்திகைச் செல்வன் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கார்த்திகைச்செல்வன் கொலை செய்யப்பட்டார். அவரது வழக்கு நிலுவையில் இருந்தது. இதுகுறித்து விசாரித்து அறிக்கையளிக்க ஆர்.டி.ஓ., முருகேசனுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி திருமங்கலத்தில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த ரவிச்சந்திரனிடம் ஆர்.டி.ஒ., விசாரணை நடத்தினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X