ஏ.எப்.டி., மில்லை இயக்க கட்சிகள் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
04:37

புதுச்சேரி: ஏ.எப்.டி., மில்லை மூடும் உத்தரவை ரத்து செய்து, மில்லை தொடர்ந்து நடத்த வேண்டும் என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.



இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம்:ஏ.எப்.டி., மில்லை லாபத்தில் இயக்கிட மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் மானியம் பெற்று நவீனப்படுத்த வேண்டும். ஏ.எப்.டி., சுதேசி, பாரதி மூன்று மில்களையும் ஒன்றிணைத்து ஜவுளி பூங்கா அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி, பார்லிமெண்ட் முன் இந்திய கம்யூ., சார்பில் போராட்டம் நடத்தி மனு அளித்தோம். ஆனால் புதுச்சேரி அரசு தொடர்ச்சியாக முயற்சி செய்து மத்திய அரசிடம் நிதியை பெறவில்லை.ஏ.எப்.டி.,மில்லில் நிர்வாக தவறுகள் குளறுபடிகளை களைந்தெறியவும், நடைபெற்ற ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசு தவறி விட்டது. கவர்னர், போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார். இதனால், அரசின் ஆலோசனை பெறாமல், அதிகாரிகளால் ஏ.எப்.டி., மில் மூடப்படுவதாக கூறப்படுகிறது. மூடும் உத்தரவை ரத்து செய்து, மில்லை தொடர்ந்து நடத்த வேண்டும்.மா.கம்யூ.,பிரதேச செயலாளர் ராஜாங்கம்:புதுச்சேரியில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தவர்களின் தவறான கொள்கை, அதிகாரிகளின் நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றால், பஞ்சாலைகள் படிப்படியாக சீரழிக்கப்பட்டு வந்தன. ஓரளவு இயங்கிக்கொண்டிருந்த சுதேசி, பாரதி மில்கள் தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளன. பஞ்சாலைகளை பாதுகாக்க மத்திய அரசிடமிருந்து நிதி உதவியும் பெறவில்லை,கோரிக்கையும் வைக்கவில்லை.இந்நிலையில் ஆலையை நிரந்தரமாக மூடும், கவர்னர் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையை மா.கம்யூ., கண்டிக்கிறது. மூடிய பஞ்சாலைகளை இயக்கிட தேவையான நிதி ஒதுக்க வேண்டும். வேலையின்மை தலைவிரித்தாடும் நிலையில், ஆலைகளை மூடும் அரசு, அதிகாரிகளுக்கு எதிரான இயக்கத்தை மா.கம்யூ., நடத்தும்.பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன்:புதுச்சேரியில், 122 ஆண்டுகளாக இயங்கி வந்த ஏ.எப்.டி., மில்லை மூடுவதாக அரசு அறிவித்துள்ளது. கவர்னர் கிரண்பேடி மில்லை மூட சொல்வதாக, பொய்யான தகவலை பரப்பி, முதல்வர் நாராயணசாமி தப்பிக்க நினைக்கிறார்.மில்லை மூடி, அந்த இடத்தை ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் ரியல் எஸ்டேட் செய்வதற்கு திட்டம் தீட்டி உள்ளனர். ஏ.எப்.டி., மில், காங்., அரசின் நிர்வாக சீர்கேட்டால் நலிவடைந்துள்ளது. இதை சரி செய்து, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது மாநில அரசின் கடமையாகும். மில் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறி, மூடுவது உள்நோக்க செயலாகும். பாரதி, சுதேசி மில்கள் மூடப்பட்டதால் பலர் வேலை இழந்தனர். 2021ம் ஆண்டு பா.ஜ., ஆட்சி அமைக்கும் பட்சத்தில், புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்களை புனரமைத்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X