பணிமனை வேலை நேரம் திடீர் மாற்றம்: விரக்தியில் மின் ஊழியர்கள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
08:54

மேட்டூர்: சுழற்சி முறை பணி நேரத்தில், திடீர் மாற்றம் செய்ததால், விரக்தியடைந்த மேட்டூர் மின் பணிமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேட்டூரில், மின்வாரிய பணிமனை உள்ளது. இங்கு, மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் மின்கோபுரங்களுக்கான, தளவாடங்கள் தயார் செய்யப்படுகின்றன. மேட்டூர் அணை கட்டுமான பணிக்கு தேவையான, இரும்பு தளவாடங்கள் தயாரிக்கும் கூடமாக திகழ்ந்த பணிமனை, 1957ல், மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆரம்பத்தில், 1,500 ஊழியர்கள் வேலை செய்த பணிமனையில், தளவாட உற்பத்திக்கான இயந்திரங்கள் நிறுவப்பட்டதால், ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது பணிமனையில், 215 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு மாதம், 750 முதல், 1,000 டன் தளவாடங்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிமனை காலை, 7:00 முதல், மதியம், 1:00 மணி வரை, மதியம், 1:00 முதல் மாலை, 6:00 மணி வரை சுழற்சி முறையில் ஊழியர்கள் வேலை செய்தனர். இது தவிர நிர்வாக பிரிவு அலுவலர்கள் காலை, 7:00 முதல் மாலை, 4:30 மணி வரை வேலை செய்தனர். இந்நிலையில், மின்வாரியம் நேற்று முதல் சுழற்சி முறை பணியை ரத்து செய்து, நிர்வாக பிரிவு அலுவலர்கள் போல ஊழியர்களையும் காலை, 7:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை பணிக்கு வரும்படி அறிவுறுத்தியுள்ளது. இதையேற்று நேற்று காலை, 7:00 மணிக்கு வேலைக்கு வந்தனர். 10:00 மணிக்கு வெளியே வந்த ஊழியர்கள், திடீர் உள்வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'தொழிற்சங்க நிர்வாகிகளை ஆலோசிக்காமல், வேலை நேரத்தை மாற்றம் செய்துள்ளனர். இலக்கை விட கூடுதல் உற்பத்தி செய்ய கூறுகின்றனர். அதற்கான ஊக்கத்தொகை வழங்குவதில்லை' என, ஊழியர்கள் குற்றம்சாட்டினர். பேச்சுவார்த்தை மூலம், நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து, அரை மணி நேர போராட்டத்தை கைவிட்டு, ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். அப்போது அவர்கள் கூறுகையில், 'போராட்டத்திற்கு, நியாயமான முடிவு கிடைக்காவிடில் நாளை (இன்று) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X