முறையாக சிகிச்சை அளிக்காததை கண்டித்து சுகாதார நிலையம் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
08:57

இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, குண்டிருசம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 30. இவரது மனைவி மோகனப்பிரியா, 26. கர்ப்பிணியான இவரை, நேற்று முன்தினம் அதிகாலை, கொங்கணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு சேர்த்தனர். நாள் முழுவதும் மருத்துவமனையில் வைக்கப்பட்ட கர்ப்பிணி, அன்றயை தினம் இரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனை செல்லாத மோகனப்பிரியா, கொங்கணாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை, 6:00 மணிக்கு குழந்தை, இறந்தே பிறந்துள்ளது. இது குறித்து டாக்டரிடம் மோகனப்பிரியா உறவினர்கள் கேட்டபோது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அதிக நேரம் தங்க வைக்கப்பட்டிருந்ததால், உங்கள் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்றனர். இதையடுத்து, மோகனப்பிரியாவின் உறவினர்கள், கொங்கணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த எஸ்.ஐ., வெங்கடாசலம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நீங்கள் சிகிச்சை பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மீது புகார் கொடுங்கள், அதை சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கிறோம். தவறு செய்தவர்கள் மீது, அவர்கள் நடவடிக்கை எடுப்பர் என கூறினர். பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X