தர்மபுரி மாவட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட 157 குழந்தை திருமணங்கள்: அதிகாரி தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
10:51

தர்மபுரி: ''கடந்தாண்டில் மட்டும், 157 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன,'' என, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கீதா தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: தர்மபுரி கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்பதால், கிராமப்புற மக்களுக்கு பெண் குழந்தை திருமணம் குறித்து தெரிவதில்லை. இவர்களுக்கு, மாவட்ட சமூக நலத்துறை, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால், இங்கு, குழந்தை திருமணம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்தாண்டில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், தர்மபுரியில், 16, காரிமங்கலம், 13, பாலக்கோடு, 18, பென்னாகரம், 39, அரூர், 20, பாப்பிரெட்டிப்பட்டி, எட்டு, மொரப்பூர், 18, நல்லம்பள்ளி, 25, என, மொத்தம், 157 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 2018ல், அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதில், மாவட்டம் முழுவதும், 280 குழந்தை திருமணங்களை, மாவட்ட சமூக நலத்துறையால் தடுக்கப்பட்டுள்ளது. பென்னாகரம், பாலக்கோட்டில் மட்டும், குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது. இவர்களின் பெற்றோர், வேலை தேடி அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்துக்கு சென்று விடுவதால், குழந்தைகள் அவர்களின் தாத்தா, பாட்டி வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், இளைஞர்களிடம் காதல் வயப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறும் அவல நிலையுள்ளது. கடந்த ஆண்டு திருமணம் வரை சென்று தடுத்து நிறுத்தப்பட்ட, 157 குழந்தைகளை, மீண்டும் பள்ளிக்கு அனுப்பியும், பெற்றோருடன் சேர்த்து வைத்தும், விடுதியில் ஒப்படைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர், 18 வயது பூர்த்தியடைந்து, திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களையும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X