ஊராட்சியில் ஊழல் 'தல'யை தட்டிக்கேட்க கிராம சபையை பயன்படுத்த வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
10:54

ஊராட்சி தலைவர்கள், ஊழல் செய்வதாக தெரிந்தால், அவர்களை தட்டிக்கேட்க, கிராமசபை கூட்டத்தை பயன்படுத்த, சமூக ஆர்வலர்கள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


தமிழகத்தில், கடந்த, டிச., 27, 30ல், இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், ஊராட்சி தலைவர்கள் பலர், பெரும் தொகையை தண்ணீராக செலவழித்து, பதவியை பிடித்துள்ளனர். இதனால், தேர்தலில் செலவழித்த தொகையை, வரும் ஐந்தாண்டுகளில் சம்பாதிக்க சிலர் திட்டமிடலாம். அதனால், ஊராட்சிக்குட்பட்ட மக்கள், அரசாங்கத்தின் வரிப்பணம் உரிய முறையில் செலவழிக்கப்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் ஜன., 26, குடியரசு தினம், மே 1, உழைப்பாளர் தினம், ஆக., 15, சுதந்திர தினம், அக்., 2, காந்தி ஜெயந்தி ஆகிய, நான்கு தேதிகளில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அரசு திட்டப் பணிகளில் முறைகேடு நடப்பதாக தெரிந்தால், அது குறித்து தகவல் அறியும் சட்டத்தில் மக்கள் கேள்வி எழுப்பலாம். வரும், 26ல், கிராம சபையில், பொது மக்கள் முழுமையாக பங்கேற்று, ஊராட்சி நிர்வாகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கண்காணித்து, ஊராட்சி நிர்வாகம் நியாயமான, நேர்மையான முறையில் நடக்க உதவ வேண்டும். மேலும், ஊராட்சியின் வரவு செலவு கணக்கு, ஊராட்சி சார்பாக வழங்கப்பட்ட அனுமதிகள், சட்டத்துக்குட்பட்டு உள்ளதா என்பது குறித்து விசாரித்து, சட்டவிதி மீறல் இருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க கோர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர், வெறும், 34 ஆயிரம் ரூபாய் மட்டும் செலவிட வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் விதி நிர்ணயித்துள்ளது. ஆனால், பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள், ஏராளமான வாகனங்களில் தங்களது ஆதரவாளர் களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்டவைகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளனர். சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பலரும், பல லட்சம் ரூபாய் செலவழித்துள்ளனர். இவர்கள் அள்ளி வீசிய பணத்தை விட, பல வழிகளில் திரும்ப பெற திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, 'லே-அவுட்'கள் அமைக்க ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் சான்று வேண்டும். இதற்கு ஏக்கர் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகை, 'கவனிப்பு' பெறுகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் நிதிகளில் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஒப்பந்த தாரர்களிடம் குறிப்பிட்ட தொகையும், சிலர், தங்களது பினாமிகளை ஒப்பந்ததாரராக நியமனம் செய்து கொள்ளையடிப்பதும் உண்டு. அரசு சட்டவிதிப்படி, ஊராட்சி தலைவருக்கு மாதம், 1,500 ரூபாய் மட்டுமே ஊதியம். ஊராட்சி மன்றக்கூட்டம் நடத்தினால், ஒரு அமர்வுக்கு, 100 ரூபாய் கட்டணம் வழங்கப்படும். ஆனால், பதவி ஏற்பின்போது, சாதாரண வீட்டில் குடியிருக்கும் ஊராட்சி தலைவர், ஐந்தாண்டுகளுக்கு பின், மிகப் பெரிய பங்களாவில் வசிக்கும் நிலைக்கு மாறி விடுகிறார். இதைத் தடுக்க, கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது சிறப்பு நிருபர் -

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X